Sun. Oct 6th, 2024

கோட்டூர்புரம் போலீசாரிடம் விசாரணை | மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் |

ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம் | கோட்டூர்புரம் போலீசாரிடம் விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார்

சென்னை ஐ.ஐ.டி. மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக வழக்கை விசாரித்த கோட்டூர்புரம் காவலர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட நிலையில் முதல் கட்டமாக கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து ஐஐடி பேராசிரியர்கள், மற்றும் பாத்திமாவின் தோழிகள், பெற்றோர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இந்த வழக்கை முதல் கட்டமாக விசாரித்த கோட்டூர்புரம் போலீசாரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

குறிப்பாக மாணவி தற்கொலை செய்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய உதவி ஆய்வாளர் கலைச்செல்வி உள்ளிட்ட போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல் அறிக்கையில் தற்கொலை தொடர்பான செல்போன் பதிவுகள் குறித்து குறிப்பிடாதது ஏன்? என மத்திய குற்றப்பிரிவு போலீசார், சம்பந்தப்பட்ட கோட்டூர்புரம் உதவி ஆய்வாளர் கலைச்செல்வியிடம் விசாரணை நடத்தியதாகவும் மாணவியின் மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விரைவில் அனைத்து தரப்பு விசாரணையை முடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக மத்திய குற்றப்பிரிவு தரப்பு தெரிவித்துள்ளது…

சில நாட்களுக்கு முன் இந்த வழக்கு சம்பந்தமான ஆவணங்களை பார்க்க வேண்டும் என்று உதவி ஆய்வாளரிடம், நிலைய ஆய்வாளர் கேட்டதாகவும் அதற்கு நான் எதற்காக ஆவணங்களை உங்களிடம் காட்ட வேண்டும் என்று ஆய்வாளரிடமே கூறியதாக தகவல்? எல்லாம் மேல இருக்கிற அதிகாரி தரும் இடம் என புலம்புகிறார்கள் காக்கிகள்…

கருப்பு ஆடு