Fri. Dec 20th, 2024

திருத்தணியில் உள்ள வணிக வளாகத்தில் | 10 கடைகளில் தொடர் கொள்ளை |

நள்ளிரவில் 10 வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை

திருத்தணி அரக்கோணம் சாலை பகல் நேரத்தில் மக்கள் நெருக்கம் மிகுந்த சாலை ஆகும் இந்த பகுதியில் நள்ளிரவில் சில மர்ம நபர்கள் இந்த பகுதியில் உள்ள வணிக வளாகங்களில் உள்ள பேன்சி ஸ்டோர், மொபைல் சர்வீஸ் கடை, எலக்ட்ரானிக் கடை, முதல் ரத்தப் பரிசோதனை நிலையம், உட்பட பல கடைகளில் பூட்டை உடைத்து கிப்ட் பொருட்கள், மொபைல், பணம் 4 லட்சத்திற்கு மேல், பொருட்கள் ஐந்து லட்சத்திற்கு மேல் மொத்தம் 9 லட்ச ரூபாய் மதிப்புள்ள பணம் பொருட்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மர்ம நபர்கள் இதை அரக்கோணம் சாலையில் உள்ள முத்தூட் பின்கார்ப் என்ற நகைகள் அடமானம் வைக்கும் கடையின் பூட்டை உடைத்துள்ளனர். இதை அந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளில் வடமாநில இளைஞர் முகம் ஒன்று கையில் இரும்பு கம்பி கொண்டு செல்வது போல காட்சிகள் பதிவாகியுள்ளது. கொள்ளை நடந்த 10 கடைகளுக்கு வலதுபுறம் மற்றும் இடதுபுறம் ஆகிய பகுதிகளில் காவல்துறை சார்பில் உள்ள ஐந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து திருத்தணி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தொடர்ச்சியாக 10 கடைகளில் கொள்ளை நடந்ததால் பாதிப்படைந்த கடை உரிமையாளர்களிடம் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன் நேரில் சென்று வியாபாரிகளிடம் இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவிப்பதாக கூறினார். சம்பவ இடத்திற்கு மாவட்ட கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது…

பேராண்மை செய்தி குழு