Mon. Oct 7th, 2024

திருவாதிரை நட்சத்திரத்தின் பலன்களும் – பரிகாரங்களும் |

திருவாதிரை நட்சத்திரத்தின் பலன்களும் – பரிகாரங்களும் |

நட்சத்திர குறியீட்டில் ஆறாவதாக வரக்கூடிய திருவாதிரை நட்சத்திரம் கண்ணீர் துளிகளை போன்ற வடிவம் கொண்டது. நட்சத்திர விலங்கு ஆண் நாய், நட்சத்திர கணம் மனுஷ கணம் நட்சத்திர பறவை அன்றில், நட்சத்திர மரம் செங்காலி ஆகும் நட்சத்திரத்தை ஆளுகின்ற தெய்வம் ருத்திரன் ஆவார். சிவபெருமானின் அம்சமான இவர் அழிக்கும் சக்தியின் வடிவம் ஆவார். திருவாதிரை நட்சத்திரத்தில் செவ்வாய், சனி போன்ற அசுப கிரகங்கள் பயணிக்கும் பொழுது இயற்கை சீற்றங்கள் நிகழும் குறிப்பாக புயலினால் பாதிப்பு ஏற்படும் திருவாதிரை நட்சத்திர அன்பர்கள் அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள். வணங்கா முடியான இவர்கள் சமூகத்தில் நிகழ்கின்ற தவறுகளை தட்டி கேட்பதுடன் சமயத்தில் தண்டிக்கவும் செய்வார்கள். கால புருஷ சக்கரத்தில் மூன்றாவது ராசி துணிச்சலை குறிக்கும் தவிர பத்திரிகை உலகத்தையும் தகவல் தொழில் நுட்பத்தையும் குறிக்கும். சிறை சாலைகளில் தூக்கு தண்டனையை நிறைவேற்றுகின்ற வேலை, சவக்கடங்கில் வேலை பார்த்தல், திரைமறைவு வேலைகளை துணிச்சலோடு செய்தலையும் குறிக்கும் சிவபெருமானின் தொடர்புடைய நட்சத்திரமான திருவாதிரை ஆன்மீகத்தில் அதிக இடுபாட்டை ஏற்படுத்த வல்லதாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் அநேக சித்த புருஷர்களையும், சைவ நாயன்மார்களை காணலாம் சினிமா துறையில் புகைப்பட கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், நடன கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள், பைனான்சியர்கள் நடிகர்கள் என அனைவரும் ஏற்றம் பெறுவார்கள். பரிகாரம் – சோம வாரமான திங்கள்கிழமைகளில் சிவபெருமானை வணங்கி வழிபட செல்வ சேர்க்கை ஏற்படும். குறிப்பாக ராசிநாதன் புதன் பாலினத்தில், ஆணும் அல்லாமல் பெண்ணும் அல்லாமல் நடுநிலையாக இருப்பதினால் அர்த்த நாரீர்ஸ்வரரை வணங்க முன்னேற்றம் ஏற்படும். திருநங்கையர்க்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்துவர பொருளாதார தடை விலகி செல்வ நிலை உயருவதை கண்கூடாக காண்பீர்கள்…

உங்கள் அருள்வாக்கு ஜோதிடர் அக்னீஷ்