Fri. Dec 20th, 2024

மனநலம் பாதிக்கப்பட்ட மகளிடமே பாலியல் | வழக்கில் தந்தை உட்பட மூவர் கைது |

மனநலம் பாதிக்கப்பட்ட மகளிடம் பாலியல் செய்த வழக்கில் | தந்தை உட்பட மூவர் கைது |

சென்னை ஓட்டேரி அடுத்த நம்மாழ்வார் பேட்டை பகுதியை சேர்ந்த லோகநாதன் (52) கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உட்பட 19 வயதில் ஒரு பெண் உள்ளார். அந்தப் பெண்ணுக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. மூத்த மகன் சதீஷ்குமார்  திருமணமாகி வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை லோகநாதன் மதுபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது தனது மகள் என்றும் பாராமல் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அந்த சமயத்தில் வீட்டிற்கு வந்த சதீஷ்குமார் அவரது தந்தையை அடித்து விரட்டி விட்டு, அந்த பெண்ணை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து சதீஷ்குமார் தலைமைச் செயலக காலனியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்…

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அனைத்து தலைமை செயலக  மகளிர் காவல் நிலைய போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை செய்த பொழுது லோகநாதன் மற்றும் அவரது கூட்டாளிகள் அய்யாவு (45) மணி (23) இருவருடன் சேர்ந்து தொடர்ந்து அந்த பெண்ணை மதுபோதையில் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கி உள்ளனர்.என தெரியவர போலீசார் மூவரையும் வலைவீசி தேடி வந்த நிலையில் ஓட்டேரி சுடுகாடு அருகே பதுங்கி இருந்த மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்ததாக தெரிவிக்கின்றனர்…

நிருபர் வே.சரவணன்