உறவினர்கள் வீட்டில் கொள்ளை | காதல் ஜோடி கைது |
உறவினர்கள் வீட்டில் கொள்ளை | காதல் ஜோடி கைது |
சென்னை வளசரவாக்கம் அடுத்த காரம்பாக்கம் செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்த ஜெகதீஸ் பாண்டியன் அவரது மனைவி ரேவதி இவர்களது வீட்டில் கடந்த 21ம் தேதி 4 பவுன் தங்க நகை கொள்ளை போனது இதுகுறித்து ஜெகதீஷ் பாண்டியன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது வாலிபர் ஒருவர் இளம் பெண்ணுடன் வந்து சென்றது பதிவாகி இருந்தது..
அதை வைத்து விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் ரேவதியின் உறவினரான கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (24) என்பதும் அவரது காதலியான மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த நித்யா (24) என்பவருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேவதி வீட்டிற்கு வந்து சென்றதும் அப்போது ரேவதி வீட்டை பூட்டி விட்டு வெளியே செல்லும் போது சாவியை சுவர் ஓரமாக வைத்து சென்றதை நோட்டமிட்டு பின்னர்…
அங்கு வந்த கார்த்திக் ரேவதி இருவரும் சாவியை போட்டு வீட்டை திறந்து நகைகளை திருடிவிட்டு பின்னர் சாவியை அதே இடத்தில் வைத்துவிட்டு தப்பி சென்றதும் தெரியவர இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் காதலர்களான இருவரும் என்ஜினீயரிங் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்ததும் தற்போது தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் நிலையில் இருவருக்கும் போதிய வருமானம் இல்லாததால் உறவினர் வீட்டிற்கு ஜோடியாக சென்று அவர்களது வீட்டை நோட்டமிட்டு தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு அந்த பணத்தை வைத்து உல்லாசமாக இருந்து வந்ததாகவும் கூறியுள்ளனர். அவர்களிடம் இருந்து 4 சவரன் நகைகளை பறிமுதல் செய்து அவர்கள் இருவரையும் கைது செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்…
பேராண்மை செய்தி குழு