Mon. Apr 7th, 2025

ரோகிணி நட்சத்திரத்தின் பலன்களும் – பரிகாரங்களும் |

ரோகிணி நட்சத்திரத்தின் பலன்களும் – பரிகாரங்களும் |

ராசி மண்டலத்தின் நான்காவது நட்சத்திரமான ரோகிணி மாட்டு வண்டியின் வடிவம் கொண்டது நட்சத்திர தெய்வம் பிரம்ம தேவன், நட்சத்திர அதிபதி சந்திரன். மூவகை கணங்களில் மனுஷ கணம், நட்சத்திர விலங்கு ஆண் நாகம், நட்சத்திர பறவை ஆந்தை நட்சத்திர மரம் நாவல் ஆகும் ரோகிணி நட்சத்திர அன்பர்களின் நட்சத்திர அதிபதி சந்திரனாகவும் ராசி அதிபதி சுக்கிரனாகவும் அமைந்து இருப்பதால் பார்ப்பவரை மயக்கும் தோற்றத்தை கொண்டு இருப்பீர்கள் கலைகளில் தேர்ச்சி பெற்று இருப்பீர்கள்.நறுமண பொருட்களை அதிகம் விரும்புவீர்கள். சுத்தத்தை பெரிதும் விரும்புவீர்கள். உணவு பிரியரான நீங்கள் வித விதமான உணவுகளை விரும்பி உண்பீர்கள். அழகுடன் நுண் கலைகளில் தேர்ச்சி பெற்று கலாச்சாரத்தின் சின்னமாக விளங்கும் உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் அவதரித்த ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே இதற்கு சாட்சி ஆவார். சந்திரன் இங்கே அதிக பலம் பெறுவதால் மிகுந்த மன தைரியம் கொண்டவர்கள் நீங்கள் இயற்கை அழகில் மனதை பறிகொடுக்கும் நீங்கள் விவசாயத்தில் வெற்றி காண்பீர்கள் சினிமா,நாடகம்,இசை,நடனம்,சண்டைப் பயிற்சி போன்ற அனைத்திலும் முத்திரை பதிப்பீர்கள். ரசனையுடன் வாழத் தெரிந்த நீங்களே நவ நாகரீகத்தின் அடையாளங்கள் ஆவீர்கள் ஜாதகத்தில் உங்களுடைய நட்சத்திரத்தில் சுக்கிரனோ,அல்லது புதனோ வலுப்பெற்றால் கலைத் துறையில் வெற்றி வாகை சூடுவீர்கள். சமயோசித புத்தி கொண்ட உங்களுக்கு வியாபாரம் நன்றாக வரும் அரசியலில் சாணக்கியனாக விளங்குவீர்கள். ரோகினி நட்சத்திரத்தில் செய்யும் அணைத்து சுப காரியங்களும் நீடித்து நல்ல பலன்களை தரும். பரிகாரம் – கலைகளின் பிறப்பிடமான நீங்கள் ஏழை எளிய குழந்தைகளுக்கு இலவசமாக வித்யா தானம் செய்யுங்கள். அல்லது அவர்களின் படிப்பிற்கு உதவி செய்யுங்கள் மகாலட்மியின் கடாக்ஷமும் கிடைக்க பெற்று பெருவாழ்வு வாழ்வீர்கள். சனிக்கிழமைகளில் மஹாவிஷ்ணு வழிபாடு காரிய தடைகளை நீக்கி சகல சௌபாக்யத்தை தரும்…

உங்கள் அருள்வாக்கு ஜோதிடர் அக்னீஷ்