Mon. Apr 7th, 2025

கார்த்திகை நட்சத்திரத்தின் பலன்களும் – பரிகாரங்களும் |

கார்த்திகை நட்சத்திரத்தின் பலன்களும் – பரிகாரங்களும் |

ராசி மண்டல நட்சத்திர குடும்பத்தில் மூன்றாவதாக இருக்க கூடிய கார்த்திகை நட்சத்திரம் கூரிய வாள் போன்ற உருவம் கொண்டது. நட்சத்திர அதிபதி சூரியன் நட்சத்திரத்திற்கான தெய்வம் அக்கினி தேவனாவார் நட்சத்திர கணம் ராட்சஷ கணமாகும். நட்சத்திர விலங்கு பெண் ஆடு, நட்சத்திர பறவை மயில், நட்சத்திரத்திற்கான மரம் அத்தி, சுறுசுறுப்பும் வேகமும் கொண்டுள்ள கிருத்திகை நட்சத்திர அன்பர்களுக்கு முன் கோபம் உள்ள உங்களிடமே தயாள குணம் நிரம்பி இருக்கும். பார்வைக்கு அழகாகவும் பலசாலியாகவும் தோன்றும் நீங்கள் குழந்தையை போன்ற உள்ளம் கொண்டவர்கள். மனதில் தோன்றும் கருத்துக்களை தயங்காமல் வெளியிடும் துணிச்சலுக்கு பெயர் போன உங்களால் தான் செயற்கரிய சாதனைகளை செய்ய முடிகின்றது. ராணுவம், காவல் துறைகளில் இருக்கின்ற கிருத்திகை நட்சத்திர அன்பர்கள் தேச நலனை உயிர் மூச்சாக கொண்டிருப்பீர்கள். போர் கலையில் நிபுணர்களான உங்களுக்கு ஆயுத பிரயோகம் மிக எளிதான ஒன்றாகும். மருத்துவ துறையில் முன்னிலை அறுவை சிகிச்சை நிபுணர்களாக விளங்குவீர்கள் வாகன உற்பத்தி , சமையல் , ஆயுதம் தயாரித்தல் , மருந்து தயாரித்தல் , அரசியல் , கலைத் துறைகளில் முன்னேற்றம் காண்பீர்கள். அரசாங்க வேலைகளில் உள்ள அன்பர்களுக்கு பதவி உயர்வு நிச்சயம் கிடைக்கும். பரிகாரம் — செவ்வாய்கிழமைகளில் மயில் வாகனனை வணங்கி வழிபட்டு ஆதரவற்றோருக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்யவும். நட்சத்திர அதிபன் சூரியனாக இருப்பதால் முன்கோபத்தை குறைக்க தியானம் செய்யுங்கள். உங்களுக்கு கீழ் வேலை செய்யும் அன்பர்களிடம் சற்று கடுமையாக நடந்து கொள்வதை தவிருங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் சிவ வழிபாடு ஏற்றத்தை தரும் அக்கினி ஸ்தலமான திருவண்ணாமலைக்கு சென்று வழிபட தோஷங்கள் நீங்கி வளர்ச்சி ஏற்படும். குறிப்பாக நட்சத்திர மரமான அத்தி மரத்தினை ஸ்தல விருட்சமாக கொண்ட ஆலயங்களுக்கு சென்று வாருங்கள் அதிர்ஷ்டம் விருத்தியாவதை கண்கூடாக காண்பீர்கள்…

உங்கள் அருள்வாக்கு ஜோதிடர் அக்னீஷ்