Mon. Apr 7th, 2025

4 கோடி ரூபாய் சொத்துக்காக மாமியாரை | துப்பாக்கி முனையில் கடத்திய வழக்கில் மருமகள் கைது |

4 கோடி ரூபாய் சொத்துக்காக மாமியாரை | துப்பாக்கி முனையில் கடத்திய வழக்கில் மருமகள் கைது |

சென்னை தாம்பரம் அடுத்த படப்பை பகுதியை சேர்ந்த பத்மினி (65) இவருக்கு கடந்த 1982ம் ஆண்டு சுப்புராயன் என்பவருடன் திருமணமாகி செந்தில் மற்றும் ராஜ்குமார் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். அதிமுக மாவட்ட பிரதிநிதியாக இருந்த சுப்புராயன் காண்ட்ராக்ட் வேலை செய்து படப்பையில் வீடுகள் மற்றும் நிலங்கள் வாங்கி வசதியாக குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். மூத்த மகன் செந்திலுக்கு திருவள்ளுர் மாவட்டத்தை சேர்ந்த மேனகா என்பவரையும், ராஜ்குமாருக்கு ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த ஆனந்தி என்பவரையும் திருமணம் செய்து வைத்தனர். கடந்த 2014ம் ஆண்டு சொத்துக்காக மூத்த மகன் செந்தில், தம்பி ராஜ்குமாரை கூலிப்படை வைத்து கொலை செய்துள்ளார்.  இந்த வழக்கில் சிறை சென்ற செந்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். வெளியே வந்த செந்தில் என்ன ஆனார் என்பது இதுவரை தெரியவில்லை. சொத்துக்காக குடும்பத்தில் கொலை நடந்து இருப்பதால் சுப்புராயன் சொத்தை இரண்டு மகன்களின் குடும்பத்திற்கும் பிரித்து கொடுத்து தனக்காக ஒரு வீடும் கொஞ்சம் நிலமும் வைத்துள்ளார்.இந்த நிலையில் காணாமல் போன செந்தில் மனைவி மேனகா தனது தோழியின் வீட்டில் தங்கி வந்துள்ளார். தோழியின் கணவர் ராஜேஷ் கண்ணா கடந்த ஆண்டு சுப்புராயனை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் ராஜேஷ் கண்ணா கைது செய்யபட்ட சிறை சென்று பின்பு ஜாமீனில் வெளியே வந்து இரண்டாவது மகன் ராஜ்குமார் மற்றும் கணவர் சுப்புராயன் கொல்லபட்ட நிலையில் தனது மூத்த மகனும் காணாமல் போனதால் பத்மினி தனியாக படப்பையில் வசித்து வந்துள்ளார். அவரிடம் இருக்கும் சொத்தை கேட்டு மேனகா தொடர்ந்து மிரட்டி வந்ததால் மேனகாவின் மிரட்டலுக்கு பயந்து பத்மினி அயனாவரத்தில் உள்ள அக்கா மகள் அமுதா வீட்டிற்கு கடந்த 18ம் தேதி வந்துள்ளார். பத்மினியை தேடி மேனகா மற்றும் ராஜேஷ்கண்ணா தனது கூட்டாளிகளுடன் 2 காரில் அமுதா வீட்டிற்கு வந்து பத்மினியை அடித்து துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். இதுகுறித்து அமுதா அயனாவரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் உதவி கமிஷ்னர் பாலமுருகன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் நடராஜன்  தலைமையில் போலீசார் பத்மினியை தேடி வந்தனர். இரண்டு நாட்களுக்கும் மேலாக தேடி வந்த போலீசார் தங்களை நெருங்கி விட்டதை அறிந்த கடத்தல் கும்பல் பத்மினியை நேற்று காலை அயனாவரத்தில் இறக்கி விட்டு சென்றுள்ளனர். பத்மினி கொடுத்த தகவலின் பேரில் மேனகாவை அயனாவரம் நாராயணன் தெரு அருகே போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட அவரது கூட்டாளிகளை 4 பேரை தேடி வருவதாகவும் கடத்தி சென்ற பொழுது அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து கடத்தி செல்ல பயன்படுத்திய கார் எண்களை சோதனை செய்த பொழுது அது போலியானது எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்ட பொழுது தனியாக உள்ள மாமியார் பத்மினியிடம் 4 கோடிக்கும் அதிகமான சொத்துகள் உள்ளதால் அதனை பலமுறை கேட்டும் அவர் தராததால் ராஜேஷ் கண்ணா உதவியுடன் அவரை கடத்த திட்டமிட்ட நிலையில் அயனாவரத்தில் அவர் உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்த நிலையில் அந்த வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு மாற்றுவது தெரிய வந்ததால் அவரை கடத்தி சென்றதும் விசாரணையில் தெரிவித்தார்…

கடத்தப்பட்ட பத்மினி செய்தியாளர்களிடம் பேசிய பொழுது தன்னை துப்பாக்கி முனையில் கூலிப்படை உதவியுடன் கடத்தி மூன்று நாட்கள் சாப்பாடு கூட அளிக்காமல் சித்ரவதை செய்ததாகவும், போலீசார் நெருங்குவதை அறிந்து தன்னை திரும்ப அயனாவரத்தில் விட வந்ததையும், எனது கணவர், மகனையும் கொன்றது போல தன்னையும் கொலை செய்ய முயற்சி செய்தாகவும் கூறிய அவர் தன்னை உயிருடன் மீட்ட போலீசாருக்கு நன்றியையும் தெரிவித்தார்….

நிருபர் வே.சரவணன்