Sun. Oct 6th, 2024

மாவட்ட ஆட்சியரை அவதூறு பேசியதாக | திமுக MLA மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு? |

மாவட்ட ஆட்சியரை அவதூறு பேசியதாக | திமுக MLA மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு? |

புதுக்கோட்டையில் கடந்த 17ம் தேதி கூட்டுறவு வார விழா அரசு சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பெயர்கள் மட்டுமே அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டு இருந்தது அதனை கண்டித்து திமுக எம்எல்ஏக்கள் மாவட்ட அலுவலகத்தில் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் போது மாவட்ட நிர்வாகம் சரியாக செயல்பட வில்லை என்றும் மாவட்டத்தில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் யாரையும் அழைக்காமல் அதிமுக எம்எல்ஏக்களை மட்டும் அழைத்து நிகழ்ச்சி நடைபெறுகிறது. தற்போது இருக்கும் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அதிமுக மகளிரணி செயலாளராக செயல்பட்டு வருகிறார். என்று கூறிய முன்னாள் அமைச்சரும் திருமயம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினருமான ரகுபதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்…

மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியை அதிமுக மகளிரணி செயலாளர் என கூறிய வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியதின் காரணமாக வழக்கறிஞர் ஷேக் திவான் என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் அவதூறாக பேசி பணிக்கு இடையூறு செய்ததாகவும் அவதூறாக பேசிய அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரவுவதற்கு காரணமான அளவுக்கு பேசியது உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி மீது வழக்கு பதிவு செய்தது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய திமுக பிரமுகர்கள் இந்த வழக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் துண்டுதலின் பேரில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்…

பேராண்மை செய்தி குழு