சென்னையில் கள்ள நோட்டு மாற்றிய நபர் கைது | 14 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் |
சென்னையில் கள்ள நோட்டு மாற்றிய நபர் கைது | 14 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் |
சென்னை அயனாவரம் ஏழுமலை தெருவை சேர்ந்த அருணகிரி(60), இவர் அயனாவரம் மார்கெட் பகுதியில் குமார் ஸ்வீட்ஸ் என்ற இனிப்பு கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 7.20 மணிக்கு ஒருவர் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து இரு நூறு ரூபாய்க்கு இனிப்புகளை வாங்கியுள்ளார். மீதம் ஆயிரத்து எட்டு நூறு ரூபாய் பணத்தை பெற்று கொண்ட அந்த ஆசாமி அந்த கடையில் இருந்து வேகமாக வெளியேறினார். இதனால் சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை சோதனை செய்த பொழுது அதுகள்ள நோட்டு என தெரியவர அந்த நபரை விரட்டிய பொழுது கேகே.நகர் வழியாக சென்று கே.எச்.ரோட்டில் ஆட்டோவில் ஏறி தப்ப முயன்ற அவரை பொது மக்கள் உதவியோடு பிடித்து அயனாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் ஓட்டேரி பாஸ்யம் தெருவை சேர்ந்த ஏழுமலை (29), என்பதும் கேட்டரிங் பணி செய்து வந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து மேலும் 6- 2000 ரூபாய் கள்ள நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கள்ள நோட்டுகளை சதீஷ் என்பவர் கொடுத்ததாக கூறியதின் பெயரில் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து சதீஷை தேடி வருகின்றனர்…
நிருபர் வே.சரவணன்