அயனாவரத்தில் கடத்தல் வழக்கில் இருவர் கைது | ஒருவர் தலைமறைவு |
அயனாவரத்தில் கடத்தல் வழக்கில் இருவர் கைது | ஒருவர் தலைமறைவு |
சென்னை அயனாவரம் ஜாயிண்ட் ஆபீஸ் மற்றும் கான்ஸ்டபிள் சாலை சந்திப்பு அருகே கடந்த 14ம் தேதி நள்ளிரவில் காரில் தகராறு செய்தபடி வந்த சிலரை ஐ.சி.எப் உதவி ஆய்வாளர் யுவராஜ் மடக்கிப் பிடித்தபோது காரில் இருந்த 3 பேர் தப்பி ஓடிய நிலையில் அயனவரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (30) மட்டும் இருந்தார். போலீஸ் விசாரணை நடத்தியதில் மணிகண்டன் கூறியதாவது எனது உறவினர் லதா என்பவரை தேடி அவரின் இரண்டாவது கணவர் முகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் எங்கள் வீட்டிற்கு வந்தனர். மேலும் லதா இருக்கும் இடத்தை கேட்டு என்னை அடித்து காரில் கடத்தி சென்றனர். செல்லும் வழியில் போலீசார் எங்களை மடக்கியதில் முகேஷ் உட்பட 3 பேரும் என்னை விட்டுவிட்டு தப்பி சென்றதாகவும் மணிகண்டன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மணிகண்டன் புகாரின் பேரில் அயனாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பெரம்பூர் சேர்ந்த கௌதம் (31) மற்றும் கார்த்திக் (32) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் வழக்கில் முக்கிய குற்றவாளி முகேஷை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்...
நிருபர் வே.சரவணன்