Sun. Oct 6th, 2024

VGP குழுமத்தினர் மீது நிலமோசடி | வழக்கு பதிவு செய்த போலீசார்? |

VGP குழுமத்தினர் மீது நிலமோசடி | வழக்கு பதிவு செய்த போலீசார்? |

தமிழகத்தின் முன்னணி தொழில் குடும்பங்களில் ஒன்றான விஜிபி குடும்பத்தினர் நிலமோசடிப் புகாரில் சிக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து விஜிபி குழுமத்தின் பங்கு தாரர்களில் ஒருவரான விஜி பன்னீர்தாஸின் மகன்களான ரவிதாஸ், ராஜாதாஸ், பாபுதாஸ் ஆகிய மூவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஜிபி சகோதரர்கள் சென்னையில் ஒற்றுமையாக கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில் சொத்துப் பிரச்னை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விஜிபி சகோதரர்களில் விஜி செல்வராஜின் மகன் வினோத் ராஜ்க்கு சொந்தமான நிலத்தை விஜி பன்னீர்தாஸின் மகன்கள் அபகரிக்க முயற்சிக்கின்றனர் என்பதுதான் பிரதான குற்றச்சாட்டு. குடும்ப சொத்தை பாகப் பிரிவினை செய்ததில் கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு தாலுகாவைச் சேர்ந்த பிஎம் கவால் கிராமத்தில் உள்ள சுமார் 7 ஏக்கர் நிலம் விஜிஎஸ் விநோத்திற்கு பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் காலாவதியான பவர் பத்திரத்தை பயன்படுத்தி, அதன் மூலம் சுமார் 1 ஏக்கர் நிலத்தை விஜி பன்னீர்தாஸின் மகன்கள் விற்பனை செய்து விட்டதாகவும், எஞ்சியுள்ள நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டதாகவும் வினோத் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்த புகாரின் அடிப்படையில் விஜி பன்னீர்தாஸின் மகன்கள் ரவிதாஸ், ராஜாதாஸ், பாபுதாஸ் ஆகிய மூவர் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முக்கிய தொழில் குடும்பத்தினர் மீது கர்நாடக போலீசார் வழக்கு பதிவு செய்தது தமிழக தொழிலதிபர்களுக்கு மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேராண்மை செய்தி குழு