Sat. Dec 21st, 2024

கலைநயம் மிக்க மீன ராசிக்கு இந்த 2020ம் ஆண்டு எப்படி |

நவம்பர் 16-2019

கலை நயம் மிக்க மீன ராசியினர்கள் சென்ற ஆண்டு ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்த சனி பகவான் லாபத்தையும் நஷ்டத்தையும் சரி சமமாக தந்திருப்பார். தற்போது லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்று உங்களுக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகின்றார். உங்கள் ஆசைகள் பூர்த்தியாகும். நண்பர்கள் உங்களுக்கு பக்க துணையாவார். மூத்த சகோவின் ஆதரவு கிடைக்கும்.

சனியின் பார்வை ராசியில் இருப்பதால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். சனி பகவானின் பார்வை ஐந்தாம் இடத்தில் இருப்பதால் பங்குச் சந்தைகளில் லாபம் ஏற்படும். கலைத்துறையை சேர்ந்த மீன ராசியினருக்கு பொன்னான காலமாகும். விளையாட்டு வீரர்கள் சாதனை புரிவார்கள். நாலாம் இட ராகுவினால் வீடு மாற்றம் ஏற்படும். இதுவரை ஒன்பதாம் இடத்தில் இருந்து நற்பலன்களை வாரி வழங்கிய  ராசிநாதன் குருபகவான் தற்போது பத்தாம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகின்றார். பத்தில் குரு வந்தால் பதவி போகும் என்பார்கள். மீன ராசியை பொறுத்த வரை பத்தாம் இடத்து குருதொழிலில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை கொண்டு வருவார். குருபகவானின் பார்வை தன ஸ்தானத்தில் இருப்பதால் பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும் குருபகவானின் பார்வை சுகஸ் தானத்தில் இருப்பதால் புதிய வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்டுவதற்கு உகந்த காலம் இதுவே ஆகும்.

பள்ளி கல்லூரி மாணவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவார்கள். குருபகவானின் பார்வை ஆறாமிடத்தில் இருப்பதால் நோய்களை நீக்கும் . போட்டி தேர்வுகளில் வெற்றியை தரும். தாய் மாமன் வழி உறவுகளில் இருந்து வந்த விரிசல்கள் விலகும். திங்கள்கிழமை நாட்களில் சிவபெருமானை வணங்கி வழிபட்டு, பதினோரு ஏழைகளுக்கு அன்னதானம் செய்துவர உங்கள் தொழிலில் உள்ள தடைகள் விலகி  முன்னேற்றம் ஏற்படும். மொத்தத்தில் அதிஷ்ட தேவதை உங்கள் கதவை தட்டுகின்றாள்…

நாளை முதல் தினமும் ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கு உண்டான துல்லியமான பலன்கள் வெளியாகும்.

உங்கள் அருள்வாக்கு ஜோதிடர் அக்னீஷ்