தைரியமாக எதையும் எதிர்கொள்ளும் | கும்ப ராசிக்கு எப்படி இருக்கும் 2020ம் ஆண்டு |
தைரியமாக எதையும் எதிர்கொள்ளும் | கும்ப ராசிக்கு எப்படி இருக்கும் 2020ம் ஆண்டு |
அஞ்சா நெஞ்சம் கொண்ட கும்ப ராசிக்காரர்களுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக லாப ஸ்தானத்தில் சஞ்சரித்த சனிபகவான் எண்ணில் அடங்கா நன்மைகளை செய்து இருப்பார். ஆனால் தற்போது விரயத்தில் ஆட்சி பலம் பெற்று குடும்ப ஸ்தானத்தை பார்வை செய்வதால் குடும்ப செலவுகள் கட்டுக்கு அடங்காமல் போகும் பண விரயத்தை தடுக்க நிலத்தில் முதலீடு செய்யலாம். சனி பகவான் விரயத்தில் இருந்தாலும் மகரம் நில ராசியாகி ஆட்சி வீடாக இருப்பதினால் நிலத்தில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும். சனி பகவானின் பார்வை ஆறாம் இடத்தில் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன் சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்களுக்கு நோய்களை தரக்கூடிய ஆறாம் இடம் கடகமாக இருப்பதால் நெஞ்சு, நுரையீரல் சம்பந்தமான பாதிப்புகளை தரும். தொழில் சம்பந்தமான எதிரிகளின் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டியது அவசியம் செவ்வாய் கிழமை நாட்களில் துர்கா தேவியை வழிபட எதிரிகளின் செயல்பாடு முடங்கும் ராசிநாதன் பார்வை ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் தந்தையாருக்கு உடல் நலம் பாதிக்கப்படலாம் பிதுர் வழி சொத்தில் வில்லங்கம் வரலாம் எனவே சொத்து விவகாரங்களில் கவனம் தேவை ராசிநாதன் சஞ்சாரம் சாதகமாக இல்லை என்றாலும் குருபகவான் லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்று இருப்பதால் சோதனைகள் சாதனைகளாகும். பண விவகாரத்தில் சிக்கனமாக இருப்பதால் செலவுகளை சமாளிப்பீர்கள். குருவின் பார்வை மூன்றில் இருப்பதால் மன தைரியம் கூடும் இளைய சகோதர்களின் வாழ்க்கை சிறப்படையும் குருவின் பார்வை பயனாக புதுமண தம்பதியருக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகமாகும். சனிக்கிழமைகளில் மஹா விஷ்ணு வழிபட்டு செய்து எட்டு ஏழைகளுக்கு உணவும், உடையும் தானமாக தருவதின் மூலம் சனி பகவானின் கடுமை நீங்கும் மொத்தத்தில் குருவருள் துணை நிற்க மகான்களை தரிசனம் செய்யவும்…
மீன ராசிக்காரர்களுக்கு பலன்கள் நாளை வெளியாகும் அருள்வாக்கு ஜோதிடர் அக்னீஷ்