Fri. Dec 20th, 2024

கொரட்டூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு முன் | வெட்டிக் கொண்ட மர்ம நபர்கள் யார்? |

கொரட்டூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு முன் | வெட்டிக் கொண்ட மர்ம நபர்கள் யார்? |

சென்னை கொரட்டூர் ரயில் நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது கொரட்டூரில் இருந்து திருவள்ளூர் நோக்கி செல்லும் வழித்தடத்தில் திடீரென கூட்டத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் அங்கிருந்த இளைஞர் ஒருவரை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டியுள்ளனர். இதனால் அங்கிருந்த ரயில் பயணிகள் சிதறி ஓடினர். பின்னர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த இளைஞரை விட்டு விட்டு இருவரும் தப்பி சென்றனர்..

வெட்டு காயம் பட்டவரை அங்கு இருந்தவர்கள் தூக்க சென்றபோது அவரும் ரத்த வெள்ளத்தில் வெட்டு காயத்துடன் தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவத்தால் ரயில் நிலையம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கொரட்டூர் காவல் துறை மற்றும் பெரம்பூர் ரயில்வே காவல் துறையினர் வெட்டியது யார், வெட்டுப்பட்டது யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மற்றும் புறநகர் பேருந்து, ரயில் உள்ளிட்டவற்றில் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொள்வது வாடிக்கையாகி உள்ளது. இதனால் கொரட்டூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த சம்பவமும் கல்லூரி மாணவர்கள் மோதலாக இருக்குமா என்ற கோணத்தில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்…

நிருபர் வே.சரவணன்