பிரபல ரவுடியின் கூட்டாளிகள் 4-பேரை போலீஸார் கைது செய்தனர்.
பிரபல ரவுடியின் கூட்டாளிகள் 4-பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை புளியந்தோப்பு சுடுகாடு அருகே கத்தியுடன் மறைந்திருந்த 4 பேரை அவ்வழியாக ரோந்துச் சென்ற போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷை கொலை செய்ய கத்திகள் வைத்திருந்ததாகவும், தற்காலிக செலவுக்கு வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, பிடிபட்ட 4 பேரிடம் இருந்து 2 விலையுயர்ந்த கார்கள், 6 அரிவாள்கள், ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்த
போலீஸார் 4-பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.