சர்ச்சைக்குரிய திருவாலங்காடு காவல் ஆய்வாளர் |
சர்ச்சைக்குரிய திருவாலங்காடு காவல் ஆய்வாளர் |
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற சனி மகா பிரதோஷம் தினத்தில் அன்று முழுவதும் சுவாமி தரிசனம் செய்ய மூன்றாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூட்டம் அதே நேரத்தில் திருவலாங்காடு காவல் ஆய்வாளராக உள்ள திரு.ரமேஷ் என்பவர்…
அத்திவரதர் தரிசனத்திலேயே அனைவருக்கும் இவரை நன்கு தெரிந்திருக்கும் அந்த சம்பவத்தில் என்ன செய்தாரோ அதே தான் இந்த கோவிலிலும் செய்துள்ளார். இந்த திருக்கோயிலுக்கு பொதுமக்கள் அதிக அளவு வந்திருந்தனர்…
இந்த கூட்டத்திலும் தனது உறவினர்கள் ஒருவரையும் அவருடன் வந்த பெண்ணையும் பக்தர்களை தள்ளிக் கொண்டு சுவாமி சன்னதிக்கு எதிரில் உள்ள நந்தியை தரிசிக்க பொது மக்களை தள்ளிக் கொண்டு வரும் வழியில் அழைத்துச் செல்லும் வீடியோ மேலே உள்ளது இந்த காவல்துறை ஆய்வாளர் ரமேஷ் செய்யும் காரியம் நியாயம் தானா பாதுகாப்பு கொடுக்க வந்த இடத்தில் சாமியை இவர் மட்டும் தரிசனம் செய்தால் விட்டு சென்றால் பரவாயில்லை தப்பில்லை ஆனால் ஒரு கூட்டத்தையே வரவழைத்து அவர்களுக்கு சிறப்பு தரிசனத்திற்கு அழைத்துச் செல்வது எந்த விதத்தில் நியாயம் என கோயிலில் தரிசனம் செய்ய மூன்று மணிநேரம் காத்திருந்த பக்தர்கள் குற்றச்சாட்டி வைக்கின்றனர். ஆய்வாளர் ரமேஷ் தொடர்ந்து இந்த திருவாலங்காடு கோயிலில் இதை வாடிக்கையாக செய்து வருகிறார் என்றும் அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்…
பேராண்மை செய்தி குழு