விடாமுயற்சியுடன் போராடும் விருச்சிக ராசிக்கு | இந்த 2020ம் ஆண்டில் |
விடாமுயற்சியுடன் போராடும் விருச்சிக ராசிக்கு | இந்த 2020ம் ஆண்டில் |
விடாமுயற்சியுடன் இறுதி வரை போராடக்கூடிய விருச்சிக ராசி அன்பர்களுக்கு ராசிநாதன் செவ்வாய் உங்களுக்கு உடல் பலத்தை தருவதோடு வெற்றிகரமான வாழ்க்கையை தந்து அருள்கின்றார். சென்ற வருடம் இரண்டாம் இடத்து சனிபகவான் பண கஷ்டத்தையும் கண் சம்பந்தமான உபாதைகளையும் தந்திருப்பார். தற்போது மூன்றாம் இடத்தில் ஆட்சி பெற்று உங்களுக்கு தைரியத்தையும் செயலில் வெற்றியையும் தருவார். இளைய சகோதர சகோதரிகளுக்கு முன்னேற்றம் ஏற்படும் பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை சனி பகவானின் ஏழாமிட பார்வையின் பயனாக குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் ஒன்பதாமிடம் உங்களுக்கு பாக்கியத்தோடு பாதகஸ்தானமாகவும் இருப்பதினால் நீர் நிலைகளில் கவனம் தேவை எச்சரிக்கையாக இருப்பது நல்லது ஒன்பதாம் இடம் பயணத்தை குறிப்பதால் தொலைதூர வாகன போக்குவரத்தில் கவனம் தேவை இதுவரை ஜென்ம ராசியில் சஞ்சரித்த குருபகவான் தற்போது இரண்டாம் இடத்தில் ஆட்சிபலம் பெற்று உங்களுக்கு நிகரில்லா பொருள் வரவையும் குடும்பத்தில் சந்தோஷத்தை தந்து அருள்கின்றார்.குருபகவானின் ஆறாம் இடபார்வை கடன்களை தீர்க்கும் குழந்தைகளின் கல்வி சிறப்படையும், குழந்தைகளின் உடல் நலம் மிகச்சிறப்பாக இருக்கும் குருபகவானின் ஏழாம் இடபார்வை கண்டங்களை விலக்கும்,குரு பகவானின் ஒன்பதாம் இடத்து பார்வையின் பயனாக தொழில் வளர்ச்சி பெருகும், பட்டம் பதவிகள் வந்து சேரும் சமுகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் அஷ்டம ராகுவினால் தடைகள் ஏற்படலாம். பரிகாரமாக செவ்வாய்கிழமைகளில் துர்கா தேவியை வழிபட்டு ஒன்பது தெரு நாய்களுக்கு உணவிட்டுவர வாகன போக்குவரத்தில் கண்டங்களை விலக்கி உங்களை பாதுகாக்கும். மொத்தத்தில் இந்த ஆண்டை பொறுத்தவரை உங்களுடைய வெற்றி நிச்சயம்…
அடுத்து தனுசு ராசிக்கு உண்டான பலன்கள் வெளியாகும்…
அருள்வாக்கு ஜோதிடர் அக்னீஷ்