Fri. Dec 20th, 2024

புதுக்கோட்டையில் பள்ளி மாணவன் மாயம் | தந்தை காவல் நிலையத்தில் புகார் |

புதுக்கோட்டையில் பள்ளி மாணவன் மாயம் | தந்தை காவல் நிலையத்தில் புகார் |

புதுக்கோட்டை அருகே உள்ள தனியார் பள்ளி மாணவன் சண்முகபிரியனை கண்டு பிடித்து தருமாறு அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார். புதுக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் ராஜகோபாலபுரம் கம்பன் நகரை சேர்ந்த வழக்கறிஞர் கணேசன் என்பவர் நகர காவல் ஆய்வாளரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். தனது மகன் சண்முகபிரியன் தனது வீட்டிலிருந்து ஹோண்டா டியோ இருசக்கர வாகனத்துடன் கடந்த 4.9.2019 அன்று வாகனத்தில் சென்றவர். இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் காணாமல் போன அவரது மகன் சிவபுரம் கற்பக விநாயகா மெட்ரிக் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இளம் பச்சை டீசர்ட், சிவப்பு வெள்ளை கோடு போட்ட அரைகால் டவுசர் அணிந்திருந்தார். என்றும் தனது மகனை கண்டுபிடித்து தாருங்கள் என கண்ணீருடன் கேட்டுக் கொண்டனர். அவரை பார்த்தவர்கள் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு நகர காவல் ஆய்வாளர் கேட்டுக் கொண்டுள்ளார்…

பேராண்மை செய்தி குழு