கோட்டூர்புரம் உதவி ஆணையர் | வாகனம் மோதியதில் ஒருவர் காயம் |
கோட்டூர்புரம் உதவி ஆணையர் | வாகனம் மோதியதில் ஒருவர் காயம் |
கோட்டூர்புரம் உதவி ஆணையர் திரு.சுதர்சன் அவர்களுக்கு காவல் துறையில் வழங்கிய வாகனத்தை தற்போது அவருக்கு ஓட்டுநராக உள்ள அபிராமபுரம் குற்றப்பிரிவு காவலர் திரு.வீரமணி (39150) இன்று காலை சுமார் 8.30 மணியளவில் வாகனத்தை எடுத்துக் கொண்டு டீசல் நிரப்ப சென்றபோது. பட்டினப்பாக்கம் சிக்னல் அருகே கெனால் பேங்க் ரோட்டில் வந்தபோது ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (45) தந்தை பெயர் நாகராஜன் என்பவர் தனது (TN 04 AU 4927) எண் கொண்ட இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் சுரேஷ் என்பவரது வலது மார்பு பகுதி மற்றும் வலது கையில் உள்காயம் ஏற்பட்டதாகவும். அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் அரசு மருத்துவமனையில் இருந்து சென்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் இந்த விபத்து குறித்து பரமேஸ்வரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் அடையார் சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் (Cr.No.467/2019 U/S 279,337.ipc பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் போக்குவரத்து போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்…
இது சம்பந்தமாக உதவி ஆணையர் சுதர்சன் அவர்களிடம் கேட்டபோது அவரது வழக்கமான பாணியில் ஆங்கிலத்தில் Now is Alright என கூறினார்…
பேராண்மை செய்தி குழு