நிர்வாகத்திறன் நிரம்ப பெற்றுள்ள சிம்ம ராசிக்கு | இந்த 2020ம் ஆண்டு பலன்கள் |
நிர்வாகத்திறன் நிரம்ப பெற்றுள்ள சிம்ம ராசிக்கு | இந்த 2020ம் ஆண்டு பலன்கள் |
நிர்வாகத்திறமை நிரம்ப பெற்ற சிம்ம ராசிக்காரர்களுக்கு தற்போது சூரியன் உங்களுக்கு அரசாளும் தகுதியை தருகின்றார். நேர்மையும் பிடிவாத குணமும் கொண்ட நீங்கள் கடுமையான உழைப்பாளிகள். சென்ற ஆண்டு சனிபகவான் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து கொண்டு சங்கடங்களை தந்தார். தற்போது ஆறாம் இடத்தில் பலம் பெற்று யோக பலன்களை தரப்போகின்றார். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் அனைவரும் தற்போது சோதனைக்கு ஆட்படுவார்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிக்கு வழிவகுக்கும். சனிபகவானின் மூன்றாம் இட பார்வை உங்கள் வாழ்க்கை துணைவருக்கு கண் சம்பந்தப்பட்ட உபாதைகளை ஏற்படுத்தலாம் சற்று கவனமாக இருத்தல் வேண்டியது அவசியம். வாகனப் போக்குவரத்தில் நிதானத்தை கடைபிடித்தல் நன்மை தரும் சனியின் ஏழாம் பார்வை உங்களுக்கு சுகமான தூக்கத்தை தரும் குருபகவானின் ஐந்தாம் இட சஞ்சாரம் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும், அரசாங்க ஆதரவையும் தரும். அரசியலில் உள்ளவர்களுக்கு கட்சி பதவிகள் கிடைக்கும். குருவின் ஐந்தாம் இட பார்வையின் பயனாக பிதுர் வழி சொத்துகள் கிடைக்கும் தெய்வ அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும் குருவின் ஏழாம் பார்வையினால் நண்பர்கள் மற்றும் மூத்த சகோதரர்களால் முன்னேற்றம் ஏற்படும், சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும் குருவின் ஒன்பதாமிட பார்வை உங்களுக்கு உடல் பலத்தையும் முக வசீகரத்தை தரும் சனிக்கிழமைகளில் எட்டு ஏழைகளுக்கு உணவு பொட்டலமும் அத்துடன் தலா முப்பத்தி ஐந்து ரூபாயும் சேர்த்து இனிப்பினை தானமாக வழங்குங்கள். நோய்கள் விலகும் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டை பொறுத்தவரையில் உங்களுக்கு வெற்றி நிச்சயம்…
கன்னி ராசிக்கு உண்டான பலன்களை நாளை காணலாம்.
அருள்வாக்கு ஜோதிடர் அக்னீஷ்