Fri. Dec 20th, 2024

மனித நேயமும் தேசப்பற்றும் அமைந்த | கடக ராசி அன்பர்களுக்கு இந்த 2020ம் ஆண்டு |

மனித நேயமும் தேசப்பற்றும் அமைந்த | கடக ராசிக்காரர்களுக்கு 2020ம் ஆண்டு |

மனித நேயமும் தேசப்பற்றும் அமையப்பெற்ற கடகராசி அன்பர்களே… வெள்ளை உள்ளத்திற்கு சாட்சி நீங்கள் தான். கற்பனைகளை காவியமாகவும், ஓவியமாகவும், கலை படைப்புகளாக மாற்றும் கடக ராசியினரே. இந்த வருடம் சனிபகவான் உங்களுடைய களத்திர ஸ்தானத்தில் பலம் பெறுவதால் உங்கள் வாழ்க்கை துணைவரின் உடல்நலம் சீராக இருக்கும்.

சனிபகவான் ஏழாமிடத்தில் திக் பலம் பெற்று உங்கள் ராசியை பார்க்கின்றார். சுறுசுறுப்பிற்கு பேர்போன நீங்கள் சோம்பல் தன்மையுடன் காணப்படுவீர்கள். மனதிலும் உடலிலும் உற்சாகம் குறைந்து காணப்படும். எட்டிற்கு அதிபதியாகி சனிபகவான் தற்போது மூன்றாமிட பார்வையால் ஒன்பதாமிடத்தை பார்பதினால் தந்தையாரின் உடல் நலம் பாதிக்கப்படும் மிகக்கவனமாக இருத்தல் வேண்டும். சனி பகவானின் பத்தாமிடப்பார்வை உங்கள் ராசிக்கு நாலாமிடமாக வருவதால்… தாயாரின் உடல் நலம் பாதிக்கப்படலாம். எனவே கவனம் அவசியம்.

தெய்வீக அருளினை இயற்கையாக பெற்றுள்ள கடக ராசியினருக்கு… பாக்கியாதிபதியான குரு பகவானின் ஆறாமிடம் சஞ்சாரம் வெற்றி வாய்ப்பினை அதிகப்படுத்தும்.தூங்க நேரமின்றி உழைக்க வேண்டி வரும். பனிரெண்டில் ராகு இருப்பதனால்… மேற்சொன்ன பலன்கள் உறுதியாகும். குருபகவானின் பொன்னான பார்வை ஜீவன ஸ்தானத்திற்கு கிடைப்பதால்.. செய்தொழில் அபிவிருத்தியாவது உறுதியாகும்.

மேலும் பனிரெண்டாம் இடமான சயன ஸ்தானத்தை குருபகவான் பார்வை செய்து ராகுவின் கெடுபலனை தடுப்பார். மேலும் குருபகவானின் பொன்னான பார்வை உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் பட்டு உங்களுடைய பொருளாதார நிலையை உயர்த்தப்போவது உறுதி மொத்தத்தில் சனி கைவிட்டாலும் குருபகவான் காப்பாற்றுவார் திங்கட்கிழமைகளில் சிவசக்தி வழிபாடு தடைகளை தகர்க்கும் கவலை வேண்டாம்..

சிம்ம ராசிக்கு உண்டான பலன்கள் நாளை வெளியாகும்…

அருள்வாக்கு ஜோதிடர் அக்னீஷ்