அறிவாற்றல் மிகுந்த மிதுன ராசிக்காரர்களுக்கு | இந்த 2020ம் ஆண்டு உங்களுக்கு |
அறிவாற்றல் மிகுந்த மிதுன ராசிக்காரர்களுக்கு | இந்த 2020ம் ஆண்டு உங்களுக்கு |
அறிவாற்றல் மிகுந்த மிதுன ராசிகாரர்களுக்கு ஜென்ம ராசியில் ராகு அலைச்சலை ஏற்படுத்தினாலும் குருவின் பார்வை நற்பலனை ஏற்படுத்தும் குருவின் பார்வை லாப ஸ்தானத்தில் விழுவதால் எண்ணங்கள் ஈடேறும். செய்தொழிலில் லாபம் உண்டாகும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். மூத்த சகோவின் ஆதரவு கிடைக்கும் .ராசியில் குருவின் பார்வை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முகம் பொலிவு பெறும் குருவின் ஒன்பதாம் இட பார்வை மூன்றாமிடத்தில் பதிவதால் இளைய சகோவிற்கு மங்களத்தை ஏற்படுத்தும் திருமண ஏற்பாடுகள் நல்லபடி நடந்தேறும் அஷ்டம ஸ்தானத்தில் சனி இருந்தாலும் கெடுபலன் நேராது காரணம் சனிக்கு மகர ராசி சொந்த வீடாகும் சனி பகவானின் பார்வை ஜீவன ஸ்தானத்தில விழுவதால் வேலையில் மாற்று சிந்தனை மேலோங்கும் அல்லது தொழிலில் மாற்றங்கள் நிகழும் சனியின் பார்வை இரண்டாமிடத்தில் விழுவதால் கண் சம்பந்தமான உபாதைகள் வரலாம். கடன் கொடுத்தால் திரும்பாது கவனமாக இருக்க வேண்டிய காலமாகும். சனியின் பார்வை பூர்வ புண்ணய ஸ்தானத்தை பார்ப்பதால் குழந்தைகளின் உடல் நலத்தில் சற்று கவனம் தேவை மஹாவிஷ்ணு வழிபாடு காரிய தடைகளை நீக்கி சௌபாக்கியதை வழங்கும். ராசியில் சஞ்சரிக்கும் ராகு குருவின் பார்வை பெற்றதினால் செயற்கரிய காரியங்களில் உங்களை இறக்கி சாதனை செய்ய வைக்கும் மொத்தத்தில் சாதனை புரிவதற்கான நேரமாகும்…
அடுத்து 2020ம் ஆண்டு கடக ராசி பலன்கள் நாளை வெளியாகும்..
அருள்வாக்கு ஜோதிடர் அக்னீஷ்