+2 படித்துவிட்டு கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்த வழக்கில் | போலி பெண் மருத்துவர் கைது |
+2 படித்துவிட்டு கிளினிக் வைத்து மருத்துவம் வழக்கில் | போலி பெண் மருத்துவர் கைது |
திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட மேல் திருத்தணி திருவள்ளூவர் தெரு பகுதியில் வீட்டில் போலி மருத்துவர் ஒருவர் மருத்துவம் பார்ப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் வந்ததையடுத்து அவரின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையில் அதிகாரிகள் திருவள்ளூவர் தெருவில் உள்ள வீட்டில் சோதனை செய்தபோது ஆங்கில மருத்துவம் பார்ப்பதற்கு உண்டான சாதனங்களை வைத்துக் கொண்டு சுப்ரமணியம் என்பவரது மனைவி வேளாங்கண்ணி (43) இவர் பிளஸ் 2 வரை மட்டுமே படித்து உள்ளார்.
இவர் அங்கு ஆங்கில மருத்துவம் வெகுநாட்களாக பார்த்து வந்ததும் தெரியவந்தது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு அதன் அடிப்படையில் வேளாங்கண்ணி என்பவர் போலியான மருத்துவர் என்றும் கூறி அவரை திருத்தணி காவல் நிலைத்தில் ஒப்படைத்தனர். மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அதன் அடிப்படையில் போலி மருத்துவரை திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்..
பேராண்மை செய்தி குழு