2020ல் மனவலிமை மிக்க ரிஷப ராசி அன்பர்களே…!!!
2020ல் மனவலிமை மிக்க ரிஷப ராசி அன்பர்களே…!!!
மனோவலிமை மிக்க ரிஷபராசி அன்பர்களே இதுவரை அஷ்டம சனியால் பட்ட துன்பத்திற்கு விடை கொடுக்கும் நேரமிது. பிதுர் வழி சொத்து பிரச்சனை நல்ல விதத்தில் முடியும். தெய்வ அனுகிரகம் கூடும். தந்தை வழி உறவினால் அனுகூலம் உண்டாகும். பாக்கியச்சனியினால் தடைபட்ட நீண்டநாள் ஆசைகள் பூர்த்தியாகும்.
ரிஷப ராசிக்காரர்கள் தன்னுடைய செயலினாலேயே பகை ஏற்படுத்திக் கொள்வார்கள்.எனவே பேச்சில் கவனமாக இருத்தல் வேண்டும். இரண்டாமிட ராகு பேச்சு திறமையோடு பிரச்சனைகளையும் தருவார் கவனம் தேவை. அஷ்டம் குருவினால் தந்தையாரின் உடல் நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணைவருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். விநாயகர் வழிபடு தடைகளை தகர்க்கும் பாக்கியச் சனி தன் மூன்றாமிட பார்வையினால் நிகரற்ற பொருள் வரவைத்து தருவார், இளைய சகோவிற்கு முன்னேற்றம் ஏற்படும், செய்தொழில் லாபம் தரும் ரிஷப ராசிக்கு ஒன்பதாம் இடமே பாதகஸ்தானம் ஆவதால் போக்குவரத்தில் கவனம் தேவை. மொத்தத்தில் எச்சரிக்கையுடன் வெற்றிக்கனியை பறிக்க வேண்டியது அவசியம்.
அடுத்து மிதுன ராசிக்காரர்களின் 2020ஆம் ஆண்டு பலன்கள் நாளை வெளியாகும்.
அருள்வாக்கு ஜோதிடர் அக்னீஷ்.