Aircel போன்று AIRTEL மற்றும் Vodafone நிறுவனங்கள் மூடப்போகிறரர்களா ?,|
Aircel போன்று AIRTEL மற்றும் Vodafone நிறுவனங்கள் மூடப்போகிறரர்களா ?,|
கடந்த ஓரிரு மாதங்களாக ஏர்டெல் மற்றும் வோடாபோன் வாடிக்கையாளர்கள் பல்வேறு சொல்லாத் துயரில் இருக்கின்றனர்.
இந்த நிறுவனங்களின் பயன்பாட்டாளருக்கு சரிவர சிக்னல் கிடைப்பதில்லையாம். தப்பித்தவறி அழைப்பு கிட்டினாலும், வாடிக்கையாளர் குரலோலி மறுமுனையில் இருப்பவருக்கு கிட்டுவதில்லையாம். மேலும், இருபுறமும் உள்ளோர் பேசிக்கொண்டு இருக்கும் போதே தொடர்பு துண்டிக்கப்படுகிறதாம்.
மேற்கூறிய நிறுவனங்களில் இணைப்பு வைத்திருப்போர், பி.ஸ்.என்.எல் வாடிக்கையாளர் அழைப்பில் மட்டும் சில தருணங்களில் பேச முடிகிறதாம் இதுவரை இலவசமென்று வழங்கி வந்த ஜியோ நிறுவனம் அழைப்புக் கட்டணம் என்று அறிவித்தவுடன், வாடிக்கையாளர் எதிர்ப்பு மற்றும் விலகி பி.ஸ்.என்.எல் மற்ற தொலைத்தொடர்பு நிறுவங்களை நாடிச் செல்ல ஆரம்பித்த பின்னர் இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டுள்ளதாம். ட்ராய் அமைப்பு ஜியோவுக்கு ஆதரவாக செயல்படுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு கேட்டால், 3 ஜி தடங்கள், அலைவரிசை கோபுரங்கள் உள்ள இடங்களில் இதுபோன்று நிகழ்கிறது. விரைவில் சரி செய்வோம் என்கின்றனராம். இதே போன்றுதான் ஏர்செல் நிறுவனம் மூடப்பட்டபோது அந்நிறுவனமும் வாடிக்கையாளருக்கு கூறி வந்ததாம்.பின்னர் திடீரென்று ஏர்செல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டதாம் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தையும் அழித்து, பிற நிறுவனங்கள் செயல்பாட்டையும் தடுத்து, ஜியோ சேவையை மோனோபோலியாக தாரைவார்க்க மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி துடிக்குது என்றும், ஈஸ்ட் இந்தியா கம்பெனி போல் இன்று அதானி இந்தியா கம்பெனியாக மாற்றிட துடிக்கின்றனர் என்று மற்ற தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர்கள் புலம்புகின்றனர்.
டிராய் உடனடியாக தலையீட்டு எல்லா செல்போன் சேவைகளும் தடங்களின்றி செயல் பட வழிகாண வேண்டுமென்று நுகர்வோர் நல ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ட்ராய் உடனடியாக தலையிடுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது…
காந்தி.கருணாநிதி