Fri. Dec 20th, 2024

ரயில் பயணிகளிடம் தொடர் வழிப்பறி | மூவரை கைது செய்த ரயில்வே போலீசார் |

ரயில் பயணிகளிடம் தொடர் வழிப்பறி | மூவரை கைது செய்த ரயில்வே போலீசார் |

சென்னை சென்ட்ரல் மற்றும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்ததால் புகாரின் அடிப்படையில் ரயில்வே போலீசார் தனிப்படை அமைத்து இரண்டு ரயில் நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர். அப்போது பேசின் பாலம் ரயில் நிலைய வடகோடியில் சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்த கன்னிகாப்புரத்தை என்று சேர்ந்த ஆகாஷ் (21), என்பவரை ரயில்வே போலீசார் கைது. இவரிடம் நடத்திய விசாரணையில் பேசின் பாலம் ரயில் நிலையம் மார்க்கமாக ரயிலில் பயணிக்கும் நபர்களிடம் வழிப்பறி செய்வதை வாடிக்கையாக வைத்திருந்ததாகவும் மேலும் விசாரணையில் இவரது கூட்டாளிகள் வினோத் (21), மற்றும் செல்வம் (21) ஆகியோர் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டது தெரியவர அவர்களையும் கைது செய்த ரயில்வே போலீசார் 7அரை சவரன் நகையையும், 8 செல் போன்களையும் பறிமுதல் செய்து மூவரையும் புழல் சிறையில் அடைத்தனர்..

நமது நிருபர்