Sat. Jan 4th, 2025

கொலை வழக்கில் 8 இளைஞர்களை | 24 மணி நேரத்தில் பிடித்த போலீசார் |

கொலை வழக்கில் 8 இளைஞர்களை | 24 மணி நேரத்தில் பிடித்த போலீசார் |

சென்னை திருமுல்லைவாயில் நேதாஜி தெரு புதிய அண்ணனூர் பகுதியை சேர்ந்த ரவுடி சந்தோஷ்குமார் (35) என்பவரை அதே பகுதியை சேர்ந்த தினேஷ் பாபு (எ) பாம்பு தினேஷ் (26), ஜீவன் பிரபு (19), வின்சென்ட் பால்ராஜ் (26), பிராங்கிளின் கேப்ரியல் (22), கணேஷ் (20), வெங்கடேஷ் குமார் (25),சரண் (26), கோபால கிருஷ்ணன் (28), ஆகிய 8 நபர்கள் சேர்ந்து பட்டபகலில் பொது மக்கள் முன்னிலையில் அரிவாள் மற்றும் கொடூர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்து விட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றனர். மேற்கண்ட குற்றச் சம்பவத்தின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்து ஆவடி காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் தலைமையில் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு விசாரணையில் இறந்து போன சந்தோஷ்குமார் கடந்த வருடம் சிரஞ்சீவி என்பவரை கொலை செய்த வழக்கில் பத்து மாதங்களாக சிறையில் இருந்து சமீபமாக வெளியே வந்துள்ளார் என்றும் இந்நிலையில் அண்ணனூர் பகுதியில் சந்தோஷ்குமார் என்பவருக்கும் இந்த 8 இளைஞர்களுக்கும் முன்விரோதம் இருந்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் சந்தோஷ்குமாரை பொதுமக்கள் முன்னிலையில் வெட்டி கொலை செய்ததாக போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் 8 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்…

நிருபர் ராம்.