தயார் நிலை உண்டியல் மட்டும் | கடவுளை பார்க்க வசதி இல்லை | திருத்தணி கோவில் நிர்வாகம் |
தயார் நிலை உண்டியல் மட்டும் | கடவுளை பார்க்க வசதி இல்லை | திருத்தணி கோவில் நிர்வாகம் |
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருத்தலமாகும். இந்த திருத்தலத்தில் முருகப் பெருமான் நான்காம் படைவீடான திருச்செந்தூர் முருகப்பெருமான் அந்த திருத்தலத்தில் சூரசம்ஹாரம் நடைபெற்று கோபத்துடன் அங்கிருந்து புறப்பட்டு திருத்தணியில் (தணிக்கையில்) மலைமேல் சாந்தமாக அமர்ந்தார் முருகப் பெருமான்.
மேலும் கந்தசஷ்டி திருவிழாவின் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும். திருத்தணியில் அதே நேரத்தில் இன்று திருத்தணி மலைக்கோயில் காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப் பெருமானுக்கு மலர்களால் லட்சார்ச்சனை புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று மாலை மலை கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். கோவில் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் தற்போது வரை செய்யப்படவில்லை.! பார்க்கிங் ஏரியா பகுதியில் பாதுகாப்பு வசதி இல்லை.!! திருத்தணி முருகன் கோயில் மலைமேல் மலையை சுற்றி விஐபி வழியில் புரோக்கர்கள் அட்டகாசம் அதிகமாக உள்ளதால் பக்தர்கள் இறங்கி வரும் வழியில் மலைக்கோயிலில் உள்ள சில புரோக்கர்களால் கூட்ட நெரிசலும் ஏற்படுகிறது.
மூலவர் சன்னதி பகுதியில் ஊழியர்கள் பணியில் இருப்பது இல்லை.! ஆகையால் அந்த பகுதியில் பக்தர்களுக்கு நெரிசல் ஏற்படுவது வழக்கமான பிரச்சனை பணம் கொடுத்தும் டிக்கெட் பெற்று வரும் பக்தர்களால் பொது வழியில் வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். இதேபோல் முருகன் கோயிலின் துணைக் கோயிலாக உள்ள திருத்தணி நந்தி ஆற்றங்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஆறுமுகசாமி திருக்கோயில் இன்று மாலை புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது இந்த ஏற்பாடுகளை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.கோயில் சார்பில் உண்டியல் மட்டும் தயார் நிலையில் உள்ளதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்…
பேராண்மை செய்தி குழு