Sun. Oct 6th, 2024

சமூக விரோத செயலுக்கு பயன்படும் நர்சரி தோப்பு | நடவடிக்கை எடுக்காத முசிறி பேரூராட்சி நிர்வாகம் |

சமூக விரோத செயலுக்கு பயன்படும் நர்சரி தோப்பு | நடவடிக்கை எடுக்காத முசிரி பேரூராட்சி நிர்வாகம் |

திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பழைய பேரூந்து நிலையம் அருகில் திருச்சி to சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பகுதியில் அமைந்துள்ள இறந்தவர்களுக்கு செய்யும் தர்ப்பண காரியங்களுக்காக பயன்படுத்தப்படும் நர்சரி தோப்பில் பட்டப்பகலில் செப்டிக் டேங் லாரிகளில் கொண்டு வந்து கழிவுநீர் திறந்து விடுவதும், மட்காத குப்பைகளை கொட்டுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.என் ஜோதிகண்ணன் அவர்களின் தொகுதி பங்கீட்டில் கட்டப்பட்ட நர்சரி தோப் இப்போது பொதுமக்கள் பயன்படுத்த முடியாதபடி கழிவுநீர், குப்பைகளை கொட்டியும், அந்த இடத்தை மது பிரியர்களின் கூடாரமாகவும் சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தும் இடமாக மாறியுள்ளது…

இந்த இடத்தை பல குற்றச் செயலுக்கு பயன்படுத்தி மதுபோதையில் சிலர் தாக்கிக் கொண்ட சம்பவங்கள் இதற்கு முன்னர் நடந்து போலீசார் சில வழக்குகளையும் பதிவு செய்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது. சமூக ஆர்வலர்களுடன், பொதுமக்கள் நேரில்‌ சென்று பேரூராட்சி அதிகாரிகளிடமும், காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்….

இங்கு லாரிகளில் கொண்டு வந்துவிடும் கழிவுநீர் தற்போது பொழியும் மழைநீருடன் கலந்து அருகில் உள்ள விவசாயிகள் பயன்படுத்தும் வாய்க்காலிலும், காவேரியிலும் கலந்து விடுவதாகவும் இதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…

பேராண்மை செய்தி குழு