கஞ்சா அடிக்கும் பூசாரியை கண்டித்த | கோவில் நிர்வாகியை கொலை செய்த வழக்கில் 7 பேர் கைது |
கஞ்சா அடிக்கும் பூசாரியை கண்டித்த | கோவில் நிர்வாகியை கொலை செய்த வழக்கில் 7 பேர் கைது |
சென்னை வில்லிவாக்கம் ராஜமங்கலம் 7வது தெருவைச் சேர்ந்த ஜானகிராமன் (50), இவர் ஐசிஎப் தொழில்சாலையில் பணிபுரிந்து வருகிறார். ஐசிஎப் அண்ணா தொழிற் சங்கத்தின் செயலாளராகவும் உள்ளார். தீபாவளி தினத்தன்று இரவு 10.00 மணியளவில் அளவில் பெரவள்ளூர் காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட பட்மேடு சுடுகாடு அருகே தனது இருசக்கர வாகனத்தில் நண்பர் தயாளன் என்பவருடன் வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அவரது தலையில் கொடூரமான வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த பெரவள்ளூர் போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை தொடர்பாக செம்பியம் உதவி ஆணையர் சுரேந்தர் அவர்கள் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து நடத்திய விசாரணையில் ஜானகிராமன் அப்பகுதியில் உள்ள ஸ்ரீதேவி இளங்காளி அம்மன் கோவிலில் செயலாளராகவும் இருந்து வந்துள்ளார். தீபாவளி அன்று சிறப்பு பூஜையின் போது கோவில் பூசாரியான ஓம் பிரகாஷ் (23), என்பவர் கஞ்சா போதையில் கோயிலுக்குள் வந்ததாகவும் இதை கண்டித்த ஜானகிராமன் பூசாரியைக் கோவிலை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறியதால் ஆந்திரம் அடைந்த பூசாரி ஓம் பிரகாஷ் தான் குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக கோவிலை நடத்தி வந்த நிலையில் கோவிலை அறநிலையத்துறை கட்டுபாட்டில் கொண்டு வந்ததில் ஜானகி ராமனுக்கும் முக்கிய பங்கு உள்ளதாகவும், கோவிலுக்கு வரும் பெண்களிடம் ஓம் பிரகாஷ் பேசி வந்ததை ஜானகிராமன் கண்டித்தும் தெரியவர இதனால் ஏற்கனவே கோபத்தில் இருந்த பூசாரி ஓம் பிரகாஷ் கஞ்சா போதையில் தனது நண்பர்களுடன் வந்து கொலை செய்தது தெரியவர ஜானகி ராமன் கொலை சம்பந்தமாக போலீசார் ஓம் பிரகாஷ், அனீஷ், குமரன், சரத்குமார், விஜய், ரவிபிரசாத் சர்போஜி ஆகிய 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்..
நிருபர் வே.சரவணன்