புதுக்கோட்டையில் மழையினால் கழிவுநீர் கலந்து மிதக்கும் | பிரசித்திபெற்ற திருக்கோயில் |
புதுக்கோட்டையில் மழையினால் கழிவுநீர் கலந்து மிதக்கும் | பிரசித்திபெற்ற திருக்கோயில் |
புதுக்கோட்டையில் உள்ள சாந்தநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் அருகில் மன்னர் காலத்தில் இருந்த பல்லவன் குளம் பழமை வாய்ந்த குளம் கடந்த ஒரு வருடமாக மழையில்லாமல் குளம் வறண்டு நகராட்சி சார்பில் பல்லாயிரம் அடி தூர் வாரப்பட்டு இருந்த குளம் தற்போது தொடர் மழையால் பல்லவன் காலத்தில் கடல் போல் நடுவில் உள்ள சூபி நிரம்பி தண்ணீர் வெளியே வந்து கொண்டு இருப்பதால் குளத்தின் அருகில் உள்ள சாந்தநாதர் கோயிலுக்குள் மழை நீர் உள்ளே சென்றதால் கோவில் கருவறையிலிருந்து கோயில் பகுதி முழுவதும் அனைத்து இடங்களிலும் தண்ணீர் சூழ்ந்து வெள்ளம் போல் ஓடிக்கொண்டிருக்கிறது…
இதனால் அருகிலுள்ள பூ மார்க்கெட் பகுதியில் மழை நீர் செல்வதால் வியாபாரிகள் முதல் பொதுமக்கள் வரை யாரும் உள்ளே சென்று வியாபாரமும் செய்ய முடிவதில்லை பூ வாங்க யாரும் வர முடியாத அளவிற்கு கழிவு நீரும் கலந்து ஓடுவதால் பக்தர்கள் கோவிலுக்கு உள்ளே வராமல் இருப்பதற்கு நாலா புறமும் அதிகாரிகள் கதவுகளை பூட்டி உள்ளதாகவும்…
புதுக்கோட்டை பகுதிகளில் தொடர்ந்து இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு மழை பெய்தால் மேலும் பெரிய அளவில் மழை நீர் உள்ளே புகுந்து சாமி சிலைகள் உள்ளிட்ட பல்வேறு சிலைகள் மூழ்கி விடவும் வாய்ப்பு ஏற்படும் என பொது மக்கள் கூறுகின்றனர். பல வருடங்களாக இதே நிலைமை இங்கு இருந்து வருவதாகவும் இதுவரை மாற்று ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகம் உட்பட மாவட்ட நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து செல்கிறது என்றும் உடனடியாக மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…
பேராண்மை செய்தி குழு