இருசக்கர வாகனத்தை திருடு | செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட இருவர் கைது |
இருசக்கர வாகனத்தை திருடு | செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட இருவர் கைது |
சென்னை வியசார்பாடி கக்கன் ஜி நகரை சேர்ந்த உதயக்குமார் (35), தனியார் நிறுவனத்தில் பணிப்புரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதாக செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டு இருந்த பொழுது இன்று காலை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் அருகே அதே பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனம் நின்றதை பார்த்த போலீசார் மறைவாக நின்று இருந்தனர் அப்பொழுது இரண்டு இளைஞர்கள் அந்த இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்ற பொழுது போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் பெரம்பூர் ரமணா நகர் பகுதியை சேர்ந்த ஹரி(20), விஜய்(20), ஆகியோர் என்பதும் இருசக்கர வாகனத்தை திருடி செல்போன் பறிப்பில் ஈடுப்பட்டதும் தெரியவர போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்ததாகவும் மேலும் அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம் ஒன்றும் 8-செல்போன்களையும் பறிமுதல் செய்ததாக தெரிவிக்கின்றனர்…
நிருபர் வே.சரவணன்