Fri. Dec 20th, 2024

சென்னை பாடியில் பட்ட பகலில் வாலிபர் ஒருவர் படுகொலை | 6 பேர் தலைமறைவு |

சென்னை பாடியில் பட்ட பகலில் வாலிபர் படுகொலை | 6 பேர் தலைமறைவு |

சென்னை பாடி புதுநகர் 13வது தெருவை சேர்ந்த அழகு(எ)அழகுராஜ் (27), ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு மாத காலமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் 12மணி அளவில் வீட்டின் அருகே உள்ள மெடிக்கல் ஷாப் அருகே நின்று கொண்டு இருந்த தனது இருசக்கர வாகனத்தை எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அழகு என்பவரை சராமாரியாக தலை மற்றும் கழுத்தில் வெட்டியுள்ளனர்.

இதில் மூளை சிதறி இரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெஜெ.நகர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்…

கொலை செய்யப்பட்ட அழகுராஜ் 2014 சிவலிங்கம் என்பவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக சிறைக்கு சென்று வந்தவர் என்பதும் பாடி புதுநகர் பகுதியில் வாலிபர்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி வந்தததின் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது முந்தைய கொலைக்கு பழி தீர்க்க நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் ஜெஜெ.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்…

நிருபர் வே.சரவணன்