பிகில் படத்தை பார்க்க பதிவு செய்யாத வாகனத்தை 120km வேகத்தில் ஓட்டி | குழந்தை பலி |

பிகில் படத்தை பார்க்க பதிவு செய்யாத வாகனத்தை 120km வேகத்தில் ஓட்டி | குழந்தை பலி |
திருவள்ளூர் மாவட்டம் பிரியான்குப்பம் பகுதியை சேர்ந்த ருத்ரகிரி என்பவர் தனது ஒன்றரை வயது குழந்தை பூஜாவை தள்ளு வண்டியல் அமர வைத்து தள்ளிக் கொண்டே தனது வீட்டு வாசலில் இருந்து பத்து அடி தூரத்தில் நகர்ந்த போது அப்போது பதிவு செய்யப்படாத புதிய இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த வாலிபர் இன்பராஜ் என்பவர் ருத்ரகிரி மற்றும் அவரது கை குழந்தையையும் இடித்து கீழே தள்ளி விட்டு வாகனம் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்து விட்டார். பிறகு அனைவரும் ஓடி வருவதை அறிந்த இன்பராஜ் இருசக்கர வாகனத்தை அங்கு விட்டு ஓடி மறைந்து விட்டார். தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் வாகனத்தை கைப்பற்றி குழந்தையும் தந்தையையும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை தலைமை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை பூஜா இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய இன்பராஜ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் திருவள்ளூர் மீரா திரையரங்கில் பிகில் படத்திற்கான கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ள வேண்டி பதிவு செய்யாத புதிய பைக்கில் 120KM வேகத்தில் சென்றதாகவும் தான் ஒரு விஜய் ரசிகர் என்றும் கூறியதாக போலீசார் தெரிவிக்கின்றனர். வாகனம் மோதி குழந்தை பூஜா பரிதாபமாக பலியானதை அடுத்து நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இன்பராஜ் என்பவரை திருவள்ளூர் தாலுகா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்…
நமது நிருபர்