Mon. Apr 21st, 2025

லைசன்ஸ்க்கு பதிலாக செல் நம்பர் வாங்கிய SI | இரவு நேரங்களில் ஆபாச வீடியோ அனுப்பி டார்ச்சர் |

லைசன்ஸ்க்கு பதிலாக செல் நம்பர் வாங்கிய SI | இரவு நேரங்களில் ஆபாச வீடியோ டார்ச்சர் |

வேலூரில் போக்குவரத்து உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் ராஜமாணிக்கம் என்பவர் குறிப்பாக தலைக்கவசம் அணியாமல் வாகனங்களில் செல்லும் மாணவிகள், மற்றும் பணிபுரியும் பெண்களை குறிவைத்து ஆவணங்களை கேட்டு இல்லாமல் போனால் உள்ளே தள்ளி விடுவேன் என் மிரட்டுவது வழக்கம் ஆண்கள் பலரை அடித்து உதைப்பது இவர் வாடிக்கை இளம் பெண்களிடம் உதவி ஆய்வாளர் ராஜமாணிக்கம் உங்க செல் நம்பரை தந்துவிட்டு போங்கோ என்று அதிகார தோரணையில் கேட்டு வாங்கிக் கொண்டு இரவு நேரத்தில் அந்த பெண்களுக்கு செல் போனில் ஆபாச வார்த்தைகளை பேசி வந்ததும் இல்லாமல் ஒரு சிலருக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பியும் காம வலைக்குள் சிக்க வைக்க முயற்சி செய்தது அம்பலமானது…

பெயர் குறிப்பிடாத ஒரு பெண்ணிடம் இரவு முழுவதும் பச்சை பச்சையாக பேசிய அந்த பெண் இவர் வலையில் விழா காரணத்தால் தினசரி துரத்தி துரத்தி நான் ஒரு மாதிரியான ஆளு நாளைக்குள் சம்மதிக்க வில்லை என்றால் விபச்சார வழக்கு உன்னை கைது செய்யப்பட்டு பத்திரிகைகளிலும்
செய்தி வெளிவரும் என்ற மிரட்டலுக்கு பயந்து அந்த பெண் அமமுகவின் வே (கி) மாவட்ட பொருளாளர் அப்புபால் வி.எம் பாலாஜியிடம் கூறி அழுதுள்ளார். இன்று வேலூர் பேலஸ் கார்னர் அருகே வழக்கம் போல பெண்ணிடம் RC எங்கே
DL எங்கே என விசாரிக்கும் போது அங்கு சென்ற அப்பு பாலாஜி போக்குவரத்து உதவி ஆய்வாளர் ராஜமாணிக்த்தை அழைத்து நள்ளிரவில் இளம் பெண்களிடம் ஆபாச வார்த்தை ஏன் பேசுகிறாய் என்றும் பல பெண்களுக்கு ஆபாச படங்களை அனுப்பியதற்கு காரணம் கேட்கும் போது அங்குள்ள காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து ஆதாரங்களை பார்த்தும் இந்த விசயத்தில் தலையிடாமல் ஒதுங்கி நின்றார்கள். அப்போது உதவி ஆய்வாளர் செல்போனில் நள்ளிரவில் இருந்து பல பெண்களுக்கு ஆபாச படங்கள் அனுப்பியது வெளிச்சத்திற்கு
வந்ததால் தனது தவறை உணர்ந்த ராஜமாணிக்கம் அண்ணா இனி இதுபோன்ற தவறை செய்ய மாட்டேன் என்று கூறி பொது மக்கள் அனைவரின் முன்னிலையில் மன்னிப்பு கோரினார். இந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் தொகுதி அமைச்சரின் சிபாரிசில் இங்கு பணிக்கு வந்தவர் என்றும் தயவுசெய்து இந்த விசயத்தை பெரிது படுத்த வேண்டாம் என்றும் உளவுத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். பொதுமக்களுக்கு ஒரு சட்டம் காவல்துறைக்கு ஒரு சட்டமா பேராண்மை எப்போதும் காவல்துறைக்கு எதிரி அல்ல இதுபோன்ற அதிகாரிகளை உயரதிகாரிகளின் பார்வைக்கு எடுத்து சொல்லும் பணியை செய்வது மட்டுமே பேராண்மை செய்தியின் சாரம்

தமிழக காவல்துறைக்கு தமிழக மக்களிடம் தனி மரியாதை உள்ள நிலையில் இதுபோன்ற காவல் துறையில் உள்ள காம பேய்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிகவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வேலூர் வாழ் பொது மக்களின்
கோரிக்கையாகவும் உள்ளது…

நமது நிருபர்