அரசு பள்ளி மாணவிகள் மாநில அளவில் சாதனை |
மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி அரசு பள்ளி மாணவிகள் சாதனை
திருவள்ளூர் வருவாய் மாவட்ட அளவில்,வேலம்மாள்(main) மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூடைப்பந்தாட்டப் போட்டியில் பெண்களுக்கான பத்தொன்பது வயதிற்குட்பட்ட பிரிவில், அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முகப்பேர் (கிழக்கு), மாணவிகள் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு திருவள்ளூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நரசிம்ம ராவ், பள்ளி தலைமை ஆசிரியர் வெண்ணிலா, மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்…
நமது நிருபர்