Sun. Oct 6th, 2024

கட்சி பிரமுகருக்காக வட்டாச்சியர் இடித்த வீடு | நடுத்தெருவில் நிற்கும் குடும்பம் |

அக்டோபர் 22-2019

சென்னையில் நீர் நிலைப்பிடிப்புகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் ஒரு பகுதியாக சென்னை அயப்பாக்கம், கொரட்டூர் போன்ற நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகள் அகற்றப்பட்டன. அயப்பாக்கம் எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள 40 வீடுகளை இடிக்கும் பணிகளில் பொதுப் பணித்துறை அதிகாரிகள், வட்டாச்சியார் அதிகாரிகள் உள்ளீட்டோர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஆனால்… ஒரு சில அரசியல் தலையீடு காரணமாக ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் 5 வருட காலமாக வழக்கும் நிலுவையில் உள்ள நிலையில்… இன்று 40 வீடுகளில் மாலா என்பவருக்கு சொந்தமான வீட்டின் 640சதுர அடி நிலப்பகுதியை மட்டும் இடித்து தள்ளினார்கள். இது குறித்து பாதிக்கப்பட்ட மாலாவின் மருமகன் கூறும் பொழுது.. மதிமுக பிரமுகர் டில்லிபாபு என்பவர் தங்களது நிலத்தின் பின்புறம் இரண்டரை கிரவுண்ட் நிலத்தை வாங்கி உள்ளதாகவும், அதற்கு முன்புறம் தங்களது நிலம் உள்ளதால் தனது அரசியல் பலத்தையும், பணபலத்தையும் பயன்படுத்தி அவரது நிலத்திற்கு தேவையான வழியை ஏற்படுத்திக் கொள்ள தங்களது வீட்டை இடித்துள்ளதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.
தங்களது வீட்டை ஒட்டி மூன்று அடுக்கு கட்டிடம் புதியதாக கட்டப்பட்டு வருவதாகவும் கூறினார். இது சம்பந்தமாக வட்டாச்சியர் ரஜினி கூறும்பொழுது 40 வீடுகளின் வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இவரது வீட்டை இடிக்கவே நீதிமன்ற உத்தரவு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும் கூறினார். நீர் நிலைப் பிடிப்புகளை அகற்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் புதிய அடுக்குமாடி கட்டிடம் கட்ட அனுமதி அளித்தது யார் என்ற கேள்வியையும், 40 வீடுகள் உள்ள நிலையில் குறிப்பிட்ட தனிநபர் வீட்டை மட்டும் இடிக்க ஆர்வம் காட்டுவது ஏன் என்ற கேள்வியையும் அப்பகுதி பொது மக்களின் கேள்வியாகவே உள்ளது. மேலும் 30நாட்களுக்குள் மற்ற இடங்களை அதிகாரிகள் இடிக்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன் என்றும் பாதிக்கபட்டவர்கள் கூறி வருகிறார்கள்… சுரேஷ் மற்றும் மாலாவின் மகளான தனலட்சுமியும் வீட்டை இழந்து தவிக்கும் இவர்களை பார்த்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…

நிருபர் வே.சரவணன்