ரவுடியை கொன்று முட்புதரில் வீசி நாடகமாடிய | கணவன் மனைவி உட்பட நால்வர் கைது |

ரவுடியை கொன்று முட்புதரில் வீசி நாடகமாடிய | கணவன் மனைவி உட்பட நால்வர் கைது |
சென்னை கொரட்டூரை அடுத்த பாடி கலைவாணர் நகரை சேர்ந்த சுரேஷ் என்ற க்ரைம் சுரேஷ் (30), இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு செங்குன்றம் அருகே வடபெரும்பாக்கம் பகுதியில் முட்புதரில் வீசப்பட்ட நிலையில் உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஜெயகொடி- கார்த்திகா தம்பதிகள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதின் காரணமாக போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் முன்னும் பின் முரணாக பதில் அளித்தனர். முதலில் சுரேஷ் அத்துமீறி தங்கள் வீட்டிற்குள் நுழைந்தாகவும் இதனால் அவரை அடித்து உதைத்து கட்டி போட்டதாகவும், பின்னர் அவரை ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சுரேஷ் தப்பி சென்றதாகவும் தெரிவித்தனர்…

இதில் பல சந்தேகம் எழுந்த நிலையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் சுரேஷை கொலை செய்துவிட்டு உடலை மறைக்க செங்குன்றம் அருகே வடபெரும்பாக்கம் அருகே உள்ள முட்புதரில் வீசியது தெரியவந்ததும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த கொரட்டூர் போலீசார் ஜெயக்கொடி – கார்த்திகா உட்பட மேலும் இருவரையும் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்…
நிருபர் வே.சரவணன்