வீடுகளில் பூட்டை உடைத்து திருடிய இருவர் கைது | 240 கிராம் தங்க நகைகள் பறிமுதல் |
வீடுகளில் பூட்டை உடைத்து திருடிய இருவர் கைது | 240 கிராம் தங்க நகைகள் பறிமுதல் |
வீட்டை நோட்டமிட்டு திருடிய இருவர் கைது !
கோவை மாவட்டம் பொள்ளாச்சி உட்கோட்டம் பகுதியில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் பூட்டி உள்ள வீடுகளில் ஆள் நடமாட்டம் இருக்கா என்று நோட்டமிட்டு நகைகள் மற்றும் பணத்தை திருடுவதாக காவல் துறையினருக்கு புகார்கள் வந்ததையடுத்து ஆய்வாளர் தங்கபாண்டியன் கொண்ட தனிப்படையினர் தலைமையில் விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவம் நடைபெற்ற இடங்களில் கிடைத்த சிசிடிவி பதிவுகளை கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டது பழைய குற்றவாளிகள் கோவை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் சரவணன் ஆகியோர் என தெரியவர இவர்கள் இருவரையும் பிடிக்க தனிப்படை போலீசார் தொடர்ந்து இருவரையும் கண்காணித்து வந்த நிலையில் பொள்ளாச்சியில் வைத்து இருவரையும் கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் சுமார் ரூ.7 லட்சத்தி 50 ஆயிரம் மதிப்புள்ள 240கிராம் எடையுள்ள தங்க நகைகளை மீட்டு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்…
நமது நிருபர்