கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இருவர் கைது | 8 கிலோ கஞ்சா பறிமுதல் |
அக்டோபர் 18-2019
சென்னை அண்ணாநகர் 18வது அவின்யூ பகுதியில் திருமங்கலம் காவல் ஆய்வாளர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த பக்கமாக சந்தேகப்படும்படி சென்ற மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை மடக்கி சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவர உடனடியாக அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் ஏழு கிணறு பகுதியை சேர்ந்ந முகமது ரியாஸ் மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கணேசன் என்பதும் தெரியவந்தது.
மேலும் முகமது ரியாஸ், பீர் என்பவருடன் வேலை பார்த்து வந்ததும், பீர் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து முகமது ரியாஸிடம் கொடுப்பதும், இவர் அதனை பெற்று கொண்டு அண்ணா நகர் 21ஆவது அவென்யுவில் வீடு வாடகைக்கு எடுத்து கணேசன் என்பவருடன் சேர்ந்து கஞ்சாவை சிறிய பொட்டலங்களாக மாற்றி சென்னை முழுவதும் விற்பனை செய்ததாகவும் ரூ.500 மற்றும் ஆயிரத்திற்கும் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவர அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அண்ணாநகரில் 5 கிலோ கஞ்சாவையும், மண்ணடியில் இருந்து 3 கிலோ கஞ்சா என அவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் முக்கிய நபரான பீர் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்…
நிருபர் வே.சரவணன்