Fri. Dec 20th, 2024

புதுக்கோட்டையில் அமைச்சரின் உதவியாளர் | அக்கா மகன் வெட்டிக் கொலை |

புதுக்கோட்டையில் அமைச்சரின் உதவியாளர் | அக்கா மகன் வெட்டிக் கொலை |

புதுக்கோட்டை அருகே அடப்பன்வயல் 3ஆம் வீதியை சேர்ந்த ராஜரத்தினம் மகன் வினோத் சக்கரவர்த்தி (27) என்பவர் இன்று இரவு 8 மணியளவில் அவரது வீட்டின் அருகே மர்ம நபர்கள் 4 பேர் இவரது கழுத்து மற்றும் தலையில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். வெட்டுப்பட்ட வினோத் சக்கரவர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்…

இவர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் உதவியாளர் அன்பானந்தம் என்பவரின் அக்கா மகன் ஆவார். இறந்த வினோத்தின் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் பலியான சம்பவத்தின் பழிவாங்கும் வகையில் இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர்..

படுகொலை செய்யப்பட்ட வினோத் சக்கரவர்த்தியின் மாமா அன்பானந்தம் அமைச்சரின் உதவியாளர் என்பதால் அரசியல் சார்ந்த பிரச்சனையாகவும் இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்..

கடந்த சில மாதங்களாக புதுக்கோட்டை நகரில் கொலை, கொள்ளை, போதை மாத்திரை ஊசிகள் இதுபோன்ற சமூக விரோத செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வழக்கம்போல காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்றும் வியாபரிகள் தெரிவிக்கிறார்கள்.

பேராண்மை செய்தி குழு