கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி | மேற்கூரை விழுந்ததில் மாணவி அதிர்ச்சி |
கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி | மேற்கூரை விழுந்ததால் மாணவி அதிர்ச்சி |
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்தில் மேற்கூரை இடிந்து விழுந்தது இந்த பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டியது மிகவும் பழைய நிலையில் இருந்துள்ளதால் இந்த கட்டிடத்தினை சரி செய்யாமல் இது இயங்கி வந்த நிலையில்.. இன்று மாலை 3 மணி அளவில் வராண்டா சீலிங் திடீரென பெரும் சத்தத்துடன் சுவர் விழுந்தவுடன் மாணவர்கள் அலறி அடித்து ஓடி உள்ளனர். பிறகு பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற 6-ஆம் வகுப்பு படிக்கும் நந்தினி என்ற மாணவி அதிர்ச்சியில் தனது பெற்றோரிடம் நடந்த விஷயத்தை பயத்துடன் கூறியுள்ளார். பிறகு தான் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது என்பது தெரியவர கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற பெற்றோர்களிடம் அங்கிருந்த மருத்துவர்கள் லேசான அதிர்ச்சி தான் வேண்டுமென்றால் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரிக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியதும் பள்ளி தலைமை ஆசிரியருடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நந்தினிக்கு CT ஸ்கேன் மற்றும் உடல் பரிசோதனை செய்தனர். பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் அப்பகுதியில் உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பள்ளியின் கட்டிடங்கள் சரிசெய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்…
நமது நிருபர்