Sun. Oct 6th, 2024

நீட் தேர்வு மையத்தில் ரூபாய் 150 கோடி மோசடி | வருமான வரித்துறை பறிமுதல் |

அக்டோபர் 13 -2019

நாமக்கல்லில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியில் நீட் தேர்வு முறைகேடு குறித்து நேற்று முன்தினம் 11ஆம் தேதி காலை முதல் நேற்று 12ம் தேதி நள்ளிரவு வரையில் பள்ளியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டனர்…

இந்த சோதனையின் போது பள்ளி நிர்வாகம் கணக்கில் காட்டாமல் பணத்தை பதுக்கியுள்ளதை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். மேலும் நிர்வாக ஊழியர்களின் வங்கி கணக்கிலும் மற்றும் லாக்கர்களிலும் பல மடங்கு தொகையை பினாமிகள் என்ற அடிப்படையில் செலுத்துப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. மேலும் பள்ளி ஆட்டிட்டோரியத்தில் ஒரு அறையில் உள்ள லாக்கரில் மட்டும் கணக்கில் வராத சுமார் ரு.30 கோடி ரூபாய் பணத்தை அதிகாரிகள் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். போலியான ரசீதுகளை தயார் செய்து போலி கணக்கை காண்பித்து ஏமாற்றியது மற்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

சிறப்பான வகுப்பு பயிற்சிகளுக்கு அதிக சம்பளம் பெறும் ஊழியர்களையும் நிர்வாகம் பள்ளியில் சேர்த்து அவர்களுக்கு அதிகபடியான சம்பளத்தை மாதம் தோறும் கணக்கில் காட்டாமல் அவர்களுக்கு அளித்துள்ளது பள்ளி நிர்வாகம் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் முழுமையான சோதனையின் போது அதிகபட்சமாக ரூபாய் 150 கோடி வரை பண மோசடி செய்தும் வரி ஏய்ப்பு பள்ளி நிர்வாகம் செய்துள்ளதால். மேலும் தொடர்ந்து சோதனை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்…

நிருபர்கள் சண்முகசுந்தரம் & வெ.ராம்