மரக்கடையில் 10 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டை பறிமுதல் இருவர் கைது.
அக்டோபர் 13-2019
சென்னை கொடுங்கையூர் பகுதியில் செம்மரக்கட்டைகள் வாங்கி விற்கப்படுவதாக மகாகவி பாரதி நகர் உதவி ஆணையர் அழகேசனுக்கு தகவல் கிடைத்ததன் பேரில் கொடுங்கையூர் பாரதி நகர் வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் ரகசியமாக பல்வேறு கடைகளை கண்காணித்து வந்தனர். அப்போது கொடுங்கையூர் ஜம்புலிங்கம் காலனி பகுதியில் பழைய மரக் கடையில் நேற்றிரவு எம்கேபி நகர் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் தலைமையில் உதவி ஆய்வாளர் கல்வியரசன் ஆகியோர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேற்பகுதியில் பழைய மரபலகைகளைப் போட்டு கீழ்பகுதியில் செம்மரக் கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதில் பழைய வீடுகளில் பயன்படுத்திய அந்த கால செம்மரக்கட்டைகள் பதுக்கியுள்ளனர். கடை முழுவதும் நடத்திய ஆய்வில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 டன் செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடையின் உரிமையாளரான கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலணியை சேர்ந்த அசாருதீன் (30) மற்றும் கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த ஷகில் (30) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் இவர்களிடம் நடத்திய விசாரணையில் பழைய வீடுகளை இடித்து தரும் பணியை செய்து வந்ததாகவும் அதில் கிடைக்கும் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்து இருந்ததாகவும் மேலும் ஆந்திராவின் சில பகுதியிலிருந்து செம்மரக்கட்டைகள் வாங்கி விற்று வந்ததாகவும் தெரிவித்தனர்.
பறிமுதல் செய்த செம்மர கட்டைகளையும் குற்றவாளிகள் இருவரையும் வனத்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்…
நிருபர் வே.சரவணன்