குடிநீர் வழங்காததை கண்டித்து விரைவில் கடையடைப்பு நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு.
அக்டோபர் 12-2019
சென்னிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட குடிநீர் வடிகால் வாரியம் முறையாக குடிநீர் விநியோகம் செய்வது இல்லை என்று கூறி கடந்த செப்டம்பர் 24-ம் தேதி பேரூராட்சி அலுவலக முற்றுகை மற்றும் சாலை மறியல் நடந்தது அப்போது நடந்த பேச்சு வார்த்தையில் அதிகாரிகள் 15 நாளில் பேரூராட்சிக்கு வழங்க வேண்டிய 21லட்சம் லிட்டர் தண்ணீரை வழங்குவதாக உறுதியளித்தனர். ஆனால் 25-நாட்கள் கடந்தும் தங்களுக்கு வழங்க வேண்டிய குடிநீரை அதிகாரிகள் இன்னும் வழங்காமல். தற்போது சென்னிமலை நகர பகுதியிலும் கடந்த 16 நாட்களாக குடி தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை.
இந்நிலையில் அடுத்த கட்ட போராட்டம் பற்றிய முடிவெடுக்க அனைத்து கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பிலும் சென்னிமலையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், மற்றும் ஈஸ்வர மூர்த்தி ஆகியோர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது…
முதல் கட்டமாக அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் சென்று முறையிடுவது அடுத்து தீபாவளிக்கு முன்னர் நகரப் பகுதியில் முழு கடையடைப்பு, கண்டன ஊர்வலம் போன்றவற்றை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது…
நிருபர் சண்முகசுந்தரம்