புதுக்கோட்டையில் போதை ஊசி மற்றும் மாத்திரை | விற்பனை செய்த இளைஞர்கள் கைது |
புதுக்கோட்டையில் போதை ஊசி மற்றும் மாத்திரை | விற்பனை செய்த இளைஞர்கள் கைது |
புதுக்கோட்டை நகர பகுதிகளான ராஜகோபாலபுரம், இரயில் நிலைய பகுதி அடப்பன்வயல் புதிய பேருந்து நிலை ஆட்டோ ஸ்டான்ட் உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்கள் போதை ஊசிகள், மற்றும் போதை மாத்திரைகள் பயன்படுத்துவதாக காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல்கள் வந்ததையடுத்து போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
புதுக்கோட்டை நகர பகுதியை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் போதை மாத்திரைகள் ஊசிகள் பயன்படுத்தி இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்த பிரபாகரன், சுகுமார் , ராகவேந்திரன், சதீஸ்வரன், பாண்டியன், தர்மா ஆகிய ஆறு (6) இளைஞர்களை திருக்கோகர்ணம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பெரியசாமி மடக்கிப்பிடித்து கைது செய்தார். அவர்கள் இடமிருந்து போதை மருந்து மாத்திரைகள் ஊசிகளை பறிமுதல் செய்து திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
நமது நிருபர்
புதுக்கோட்டை நகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் போதை மாத்திரை ஊசிகள் பயன்படுத்துவது அதிகரித்து வருவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…