திருமணம் வேண்டாம் என்று கூறியதால் ஆத்திரத்தில் அண்ணனை கொன்ற தம்பி.
அக்டோபர் 07-2019
சென்னை ராயப்பேட்டை சிவசுப்பிரமணியன் தெருவில் வசிப்பவர் பாஸ்கர் (35), தனியார் அச்சகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது தம்பி தனசேகர் (31), ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் பாஸ்கருக்கு பெண் பார்த்து திருமணம் நிச்சயமாகியுள்ளது. நிச்சயமான பின் திருமணம் வேண்டாம் என பாஸ்கர் மறுத்துள்ளார். இதனால் பாஸ்கருக்கும் தனசேகரனுக்கும் இடையே பிரச்சினை தொடர்ந்து இருந்ததாகவும் நேற்று பிற்பகல் அதே பிரச்சினை வந்தபோது ஆத்திரம் அடைந்த தனசேகர் கத்தியை எடுத்து பாஸ்கரை மிரட்டும் நோக்கில் வெட்டுவதாக கூறி பாய்ந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக ஆழமாக வெட்டியதில், பாஸ்கர் அதே இடத்தில் சரிந்து விழுந்து உள்ளார்.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பாஸ்கரை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். ஆனால் அங்கு பாஸ்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் தனசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நமது நிருபர்