ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த சிறுவர்கள் கூவம் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு.
அக்டோபர் 07-2019
சென்னை கிரீம்ஸ் சாலையை சேர்ந்த சிறுவர்கள் சிலர் மக்கீஸ் தோட்டம் பகுதியில் உள்ள கூவம் ஆறு கரைப்பகுதியில் விளையடிக்கொண்டு இருந்தனர். அப்போது பிரதீப் என்பவர் கூவம் ஆற்றில் விழுந்து சகதியில் மாட்டிக் கொள்ளவே பிரதீப்பை காப்பாற்ற ரீதிஷ் குமார் உட்பட சிறுவர்கள் சிலர் கூவம் ஆற்றில் இறங்கி உள்ளனர். ஆனால் பிரதீப் மற்றும் ரீதிஷ் குமார் ஆகிய இருவரும் சேற்றில் சிக்கி ஆற்றின் உள்ளே மூழ்கினார்கள்.
தகவலறிந்த எழும்பூர் தீயணைப்பு துறையினர் சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ரீதீஷ்குமார் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர் பிரதீப்பின் உடலும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நமது நிருபர்