வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது.
அக்டோபர் 05 2019
சென்னை கொடுங்கையூர் அமுதா நகர் முத்து வேல் என்றவர் மளிகை கடை நடத்தி வருகிறார். காலையில் கடை திறப்பதற்காக சின்னாடி மடம் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கத்தியை காட்டி 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்ததாகவும், அவரிடம் இருந்த பணத்தை பறித்து சென்றதாக முத்துவேல் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் கொடுங்கையூர் குப்பைமேடு பகுதியில் தலைமறைவாக இருந்த ஹாஸ்டல் சரவணன் (19), டேனி(22), ஸ்ரீதர் (21), உட்பட மூன்று சிறுவர்களுடன் மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்தனர். 3 ரவுடிகள் மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளதால். அவர்களிடமிருந்து கத்தியையும் பறிமுதல் செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தாக போலீசார் தெரிவிக்கின்றனர்…
சிறுவர்களை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்பு காப்பகத்தில் சேர்க்கப்பட்டதாக தெரிவித்தனர்…
நிருபர் வே.சரவணன்